வங்கக் கடலில் உருவானது காற்றவுத்தத் தாழ்வு.. 17ஆம் தேதி வரை.. கனமழை நீடிக்கும்.. வானிலை மையம்
சென்னை: தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நீடித்து வந்த வளிமண்டல சுழற்சி தற்போது காற்றழுத்தமாக மாறியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 17ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது இதன் அறிகுறியாக தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். குறிப்பாக பருவமழை தகுந்த காலத்தில் முறையாக தொடங்க இருப்பதால் விவசாயிகளும் குஷியாகி உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது வங்கக் கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு தற்போது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும். பின்னர் வட தமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும்.
அதேபோல் தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து அடுத்த நான்கு தினங்களில் விலகும் நிலையில் கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீச கூடும்.அப்போது 15 மற்றும் 16ஆம் தேதி வாக்கில் வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று கன மழை:
விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ஆகிய பகுதிகளில் மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை, மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கனமழை:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை மழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் மிக கனமழை முதல் அதிக கனமழை(16.10.2024):
சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் கன மழை:
வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
17.10.2024 கன முதல் மிக கனமழை:
திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர்,திருப்பத்தூர், மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், மற்றும் ஈரோடு, ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
வங்கக்கடல் பகுதிகளான தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகள் ஆந்திரா கடலோர பகுதிகள் தென்மேற்கு வங்க கடல் பகுதிகள் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 17ஆம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அதே சமயம் அரபிக்கடல் பகுதிகளான கேரளா- கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், மத்திய பகுதிகள், வடக்கு அரபிக் கடலின் தெற்கு பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்