மழை அப்டேட்: தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழை.. 11 மாவட்டங்களில் கன மழை வாய்ப்பு!
Dec 11, 2024,02:40 PM IST
சென்னை: வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஆறு மாவட்டங்களில் மிக கனமழையும், 11 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8:30 மணி அளவில் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்க கடலில் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் இலங்கை தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 17ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான விவரம்:
இன்று மிக கனமழை ஆரஞ்சு அலர்ட்
கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று கனமழை:
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்):
அரியலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை நான்கு மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கனமழை:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ஆகிய 23 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 13ஆம் தேதி கனமழை:
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்