ஐந்து மாவட்டங்களில் இன்று கன மழை.. நாளை 8 மாவட்டங்களில் அதி கன மழை.. வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ஐந்து மாவட்டங்களில் கன மழைக்கும், நாளை 8 மாவட்டங்களில் அதிக கன மழைக்கும், நாளை மறுநாள் இரண்டு மாவட்டங்களில் அதிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களுக்கு அதே பகுதிகளில் நிலை கொண்டு இருப்பதால் தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால், ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் எந்த பகுதிகளில் கன முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும் என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி,
இன்று கன மழை:
மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை அதி கனமழை:
நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், ஆகிய மூன்று மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் நாளை அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை மிக கனமழை:
விழுப்புரம், கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், ஆகிய 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கன மழை:
செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் அதிக கன மழை:
நாளை மறுநாள் மயிலாடுதுறை, கடலூர், ஆகிய இரண்டு மாவட்டங்களில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் மிக கனமழை:
விழுப்புரம், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ஆகிய ஆறு மாவட்டங்களில் நவம்பர் 27ஆம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மக்களே நாளை மறுநாள் உஷார்!
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, இராமநாதபுரம், ஆகிய 8 மாவட்டங்களில் 27ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்