தனியார் பள்ளி.. வாகனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்.. வெளியிட்டது தமிழக அரசு!
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் பள்ளி இறுதி நாட்களில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி அனைத்து தனியார் பள்ளி வாகனங்களுக்கான அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிப்பது வழக்கம். சென்னை தாம்பரத்தில் பள்ளி மாணவி ஒருவர், பஸ்சுக்குள் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்து அநியாயமாக உயிரிழந்த சம்பவத்திற்குப் பின்னர் பள்ளிப் பேருந்துகளின் பாதுகாப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதனை தனியார் பள்ளிகள் செயல்படுத்தி, பள்ளிகள் திறக்கும் போது அதாவது ஜூன் மாதம் பள்ளி வாகனங்களில் தமிழக அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளதா என்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இதன்படி இன்று தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கான அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மட்டுமல்லாமல், இதனை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் கூறப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்.
-அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும்.
-அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஒரு பெண் உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும்.
-பள்ளி வாகனம் ஓட்டுநர்கள் கனரக வாகன ஓட்டுனர்கள் உரிமத்துடன் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
-ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.