வரலாற்றில் முதல் முறையாக.. தமிழ்தாய் வாழ்த்து பாடலை பாடிய ரிப்பன் மாளிகை!

Baluchamy
Feb 28, 2023,01:04 PM IST
சென்னை: சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இன்று புதிய வரலாறு படைக்கப்பட்டது. இன்று நடைபெற்ற சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் முதல் முறையாக தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது.



சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இதில் துணை மேயர் மகேஷ்குமார், மாநகர ஆணையர், நிலைக்குழு தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.


விரைவில் கொல்லப்படுவார் விலாடிமிர் புடின்.. உக்ரைன் அதிபர் அதிர்ச்சித் தகவல்!


முதலில் கடந்த 16 ஆம் தேதி மறைந்த 122வது வார்டு உறுப்பினர் ஷீபா வாசுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் மற்றொரு சுவாரசிய நிகழ்வும் நடைபெற்றது. தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குகிறது. அதேபோல் ரிப்பன் மாளிகையில் நடைபெறும் மாமன்ற கூட்டத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கவேண்டும் என கடந்த மாதம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. 

அதன்படி இன்று தொடங்கிய மாமன்ற கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. மாநகராட்சி மாமன்றக் கூட்ட வரலாற்றிலேயே முதல் முறையாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேயர்களின் ஆட்சி தொடங்கி தற்போது வரை பல நூற்றாண்டுகளை கடந்து செயல்பட்டு வரும் இந்த சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.