அடுத்த 7 நாட்களுக்கு சூப்பரான மழை காத்திருக்கு மக்களே... சென்னை வானிலை மையம்

Meenakshi
Jun 17, 2024,06:00 PM IST

சென்னை: தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு நல்ல மழை பெய்ய இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் கடந்த  அக்னி நட்சத்திர நாட்களில் வெயில் வாட்டி வதைக்கு என்று நினைக்கும் போது, கோடை மழை பெய்து மக்களை வெயிலின் தாக்கத்தில் இருந்து காத்தது. அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னர் வெயில் மக்களை தாக்கி வந்தது. அதன்பின்னர் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து மக்களையும், பூமியையும் குளிர்வித்தது. இதனை அடுத்து இன்று வெளியான வானிலை அறிவிப்பின் படி அடுத்து உள்ள 7 நாட்களுக்கு தமிழகத்தில் நல்ல மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.




இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளா கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு  சுழற்சியால் மலைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று முதல் ஜூன் 21ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


22.06.2024 மற்றும் 23.06.2024 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


அடுத்த 5 தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு


17.06.2024 முதல் 21.06.2024 வரை அடுத்த 5 தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.


வானிலை முன்னறிவிப்பு:


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கக்கூடும்.


மீனவர்களுக்கான எச்சரிக்கை 


இன்று முதல் ஜூன் 21ஆம் தேதி வரை மன்னர் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடை 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.