Happy Deepavali.. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு.. தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிப்பு!

Aadmika
Oct 19, 2024,07:24 PM IST

சென்னை : தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 01ம் தேதியான வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  இதனால் வெளியூர்களுக்குப் போகும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஹேப்பியாகியுள்ளனர். இந்த அறிவிப்பால் தற்போது மொத்தமாக 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.


இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக பலரும் சொந்த ஊர்களுக்கு தயாராகி வருகிறார்கள். மறுநாள் நவம்பர் 01ம் தேதி வெள்ளிக்கிழமை வேலை நாள் என்பதால் உடனடியாக ஊர் திரும்புவது பலருக்கும் சிரமமான காரியமாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 01ம் தேதியான வெள்ளிக்கிழமை, விட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.




குறிப்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் இந்தக் கோரிக்கையை வைத்திருந்தனர். இடையில் ஒரு நாள் மட்டும் வேலை நாளாக இருந்தால் திரும்புவது சிரமம் என்பதால் இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து வெளியூர் சென்றவர்கள் ஊர் திரும்புவதற்கு வசதியாக நவம்பர் 1ம் தேதியன்று, அரசு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


அரசு அலுவலகங்கள், பொத்துறை அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றிற்கு நவம்பர் 01ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 01ம் தேதிக்கு பதிலாக நவம்பர் 09ம் தேதி வேலையாக செயல்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை நாளாக ஆகி உள்ளது.


அக்டோபர் 31, நவம்பர் 01 விடுமுறை நாட்கள். நவம்பர் 02 மற்றும் நவம்பர் 03 ஆகிய நாட்கள் வார இறுதியான சனி, ஞாயிறு நாட்கள் என்பதால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை நாட்கள் கிடைக்கிறது. இதனால் தீபாவளிக்கு வெளியூர் செல்ல திட்டமிட்டிருப்பவர்கள் இது மிகவும் குஷியாக செய்தியாக மாறி உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்