காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் இதுதான்.. தேனி, திருச்சி, ஆரணிக்குப் பதில் வேறு ஒதுக்கீடு!
சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் 9 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் போட்டியிட்டது காங்கிரஸ். இதில் தமிழ்நாட்டில் தேனி தொகுதியில் காங்கிரஸ் தோற்று, மற்ற 8 தொகுதிகளிலும் வென்றது. இந்த முறையும் அதே அளவிலேயே தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது.
இந்தத் தொகுதிகள் எவை என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது. தொகுதிகளை ஒதுக்கும் ஒப்பந்தத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் இன்று அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்திட்டனர்.
கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளில் தேனி, திருச்சிராப்பள்ளி, ஆரணிி தொகுதிகளில் இந்த முறை காங்கிரஸ் போட்டியிடவில்லை. அதற்குப் பதில் கடலூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்:
1. புதுச்சேரி
2. கடலூர்
3. திருவள்ளூர் (தனி)
4. கிருஷ்ணகிரி
5. கரூர்
6. கன்னியாகுமரி
7. சிவகங்கை
8. மயிலாடுதுறை
9. திருநெல்வேலி
10. விருதுநகர்