2025 - 26 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்.. வரும் மார்ச் 14ஆம் தேதி.. தாக்கல்.. சபாநாயகர் அறிவிப்பு..

Manjula Devi
Feb 18, 2025,05:56 PM IST

சென்னை: 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வரும் மார்ச் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை தொடர்ந்து மார்ச் 15ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.


2025 -26 ஆம் தேதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. இதனால் தமிழக மக்களிடையே அதிர்ப்தி நிலவியது. இந்த மத்திய பட்ஜெட் தாக்கல் செய்து இரண்டு வாரங்கள் நிறைவடைந்து நிலையில், மாநில அளவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். 




அந்த வகையில் தமிழ்நாட்டில் பட்ஜெட்டை பொது பட்ஜெட் மற்றும் வேளாண்மை பட்ஜெட் என இரண்டாக பிரித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்  செய்கிறார். இந்த பட்ஜெட்டில் மக்களுக்கு பயனுள்ள வகையில் என்னென்ன சிறப்புத் திட்டங்கள் இடம்பெற உள்ளன என்று மக்களிடையே பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. அதே சமயம் ஆளுங்கட்சியின் இறுதி முழு பட்ஜெட் தாக்கல் என்பதால் தமிழ்நாடு அரசு பட்ஜெட் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் அனைத்து துறை சார்ந்த அமைப்புகளும் பங்கேற்று அவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு பரிசீலனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே தமிழக பட்ஜெட் எப்போது தாக்கல் ஆகிறது என்ற எதிர்பார்ப்பு அனைத்து அமைப்புகளிடம் நிலவி வந்தது.


இந்த நிலையில் 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது தொடர்பான தகவல்களை சபாநாயகர் அப்பாவு வெளியிட்டுள்ளார்.


அதன்படி 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் வரும் மார்ச் 14ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட பட உள்ளது . இந்த நிதிநிலை அறிக்கை மார்ச் 14ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய இருக்கிறார்.தொடர்ந்து மார்ச் 15ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.இந்த வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்ய உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.