தமிழக பட்ஜெட் 2024-25: கலைஞர் வீட்டு வசதித் திட்டம்.. கோவையில் பிரமாண்ட நூலகம்.. பட்ஜெட் அம்சங்கள்
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் தமிழக அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.
பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் மற்றும் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் விவரம்:
* தஞ்சாவூரில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் சிப்காட் தொழிற்பூங்கா
* கோவையில் ரூ.1100 கோடியில் புதிய தொழில்நுட்ப பூங்கா
* மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்காக 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள்
* இல்லம் தேடிக் கல்வித் திட்டத்திற்கு ரூ. 100 கோடி
* கலைஞர் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு
* முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்த ரூ.27000 கோடி நிதி ஒதுக்கீடு
* கீழடியில் திறந்தவெளி அரங்கம் ரூ.17 கோடி ஒதுக்கீடு. தொல்லியல் துறைக்கு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு
* சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்க்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு
* அடையாறு ஆற்றை மீட்டெடுக்க ரூ. 1500 கோடி நிதி ஒதுக்கீடு
* கோவளம், பெசன்ட் நகர், எண்ணூர் கடற்கரை ரூ. 100 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்
* சிங்கார சென்னை திட்டத்திற்கு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு
* மினி பேருந்து திட்டம் விரிவுபடுத்தப்படும். மினி பேருந்து திட்டம் விரிவுபடுத்தப்படும். வரும் நிதி ஆண்டில் 3000 புதிய பேருந்துகள், 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.
* திருப்பரங்குன்றம் , திருநீர்மலை கோயில்களில் ரோப் கார் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
* ரூ.5,718 கோடி மதிப்பிலான 6,071 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்பு
* 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில்களில் ரூ.100 கோடி மதிப்பில் திருப்பணிகள்
* பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் புனரமைப்புத் திட்டம்.
* ஆதிதிராவிட இளைஞர்களுக்கான தொழில்முனைவோர் கடன் திட்டம் - ரூ.50 கோடி ஒதுக்கீடு. 35% வட்டி * மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்
* அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் - ரூ.230 கோடி ஒதுக்கீடு
* ஆதிதிராவிட இளைஞர்களுக்கான தொழில்முனைவோர் கடன் திட்டம்.
* கடற்கரை மேம்பாட்டுக்காக 'நீலக் கொடி கடற்கரைச் சான்றிதழ்' - ரூ.250 கோடி ஒதுக்கீடு..!
ரூ.50 கோடியில் புராதனக் கட்டடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.
* "கலைஞர் பன்னாட்டு அரங்கம்" - 3 லட்சம் சதுர அடியில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு பகுதியில் அமைக்கப்படும்.
* ரூ.20 கோடியில் 'கைவினைஞர் மேம்பாட்டுத் திட்டம்' - தமிழ்நாடு, இந்தியாவின் பிற மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி, கைவினைப் பொருள்கள் விற்பனைக்காக சென்னையில் வணிக வளாகம். ரூ.227 கோடி ஒதுக்கீடு
* கரூர், ஈரோடு, விருதுநகர் மாவட்டத்தில் சிறிய ஜவுளிப் பூங்காக்கள் - ரூ.20 கோடி ஒதுக்கீடு.
ஜவுளித் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு
* ஆவின் பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள். ரூ.60 கோடி மதிப்பீட்டில் நவீனத் தொழில்நுட்பங்கள் & தானியங்கி இயந்திரங்கள்.
* ரூ.450 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவுகளும் மீன் இறங்குதளங்களும் அமைக்கப்படும்.
* கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு ரூ. 13,720 கோடி நிதி ஒதுக்கீடு
*அரசு பங்களிப்புடன் பூந்தமல்லி அருகில் புதிய திரைப்பட நகரம் உருவாக்கப்படும்
*திறந்த வெளி அருங்காட்சியகத்திற்கு ரூ.17 கோடி நிதி ஒதுக்கீடு
* மொழித் தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி ரூ. 5 கோடி
* சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ. 12,000 கோடி நிதி ஒதுக்கீடு
* மூன்றாம் பாலினத்தோரின் கல்லூரிப் படிப்புக்கான முழுச் செலவையும் அரசே ஏற்கும்
* 25 கோடியில் ஆட்டிசம் உடையோருக்கு உயர்திறன் மையம்.
* ராமநாதபுரம், ஏற்காட்டில் ரூ 56 கோடி செலவில் ரேடார்கள் அமைக்கப்படும்.
* மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் அமைத்திடும் சட்ட முன்வடிவு நடப்பு கூட்ட தொடரில் அறிமுகப்படுத்தப்படும்.
* 25 கோடியில் ஆட்டிசம் உடையோருக்கு உயர்திறன் மையம் சென்னையில் அமைக்கப்பட உள்ளது.
* மதுரை மற்றும் திருச்சியில் புதிய டைடல் பார்க் அமைக்கப்படும்.
* மதுரையில் ரூபாய் 345 கோடியில் 6.4 லட்சம் சதுர அடியில் புதிய டைடல் பார்க் அமைக்கப்படும்.
* திருச்சியில் ரூபாய் 350 கோடியில் 6.3 லட்சம் சதுர அடியில் புதிய டைடல் பார்க் அமைக்கப்படும்.
* தஞ்சை, சேலம், வேலூர்,திருப்பூர், தூத்துக்குடி, உள்ளிட்ட ஐந்து மாநகரங்களில் நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்.
* புதிதாக அமைக்கப்படும் நியோ டைடல் பூங்காக்கள் மூலம் 13,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.