மதுரையைக் கலக்கிய.. பாஜகவின்.. நம்ம ஊரு மோடி பொங்கல்.. !
Jan 12, 2023,12:03 PM IST
மதுரை: தமிழ்நாடு பாஜகவின் சார்பில் மாநிலம் முழுவதும் 1229 இடங்களில் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. நம்ம ஊரு மோடி பொங்கல் என்ற பெயரில் இந்த பொங்கல் விழா நடைபெறுகிறது.
மதுரையில் பல்வேறு இடங்களில் நடந்த பொங்கல் விழாவில் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். மதுரையில் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் உத்தங்குடி பரசுராமன் பட்டி கிராமத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பெரும் திரளான பாஜகவினர் இதில் கலந்து கொண்டனர். பெண்கள் பொங்கல் வைத்து குலவையிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதேபோல பரவை ஒன்றியத்திலும் பொங்கல் வைக்கும் வைபவம் நடைபெற்றது. இதிலும் பெரும் திரளான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். பல்வேறு விளையாட்டுகளும் இதில் இடம் பெற்றிருந்தன.
அனைத்துப் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சிகளிலும் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.