லஞ்ச் பாக்ஸ் ரெசிபி.. மழைக்கு செமையா இருக்கும்.. சூடான கோவக்காய் புளி குழம்பு + சுடு சாதம்!
- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: கிளைமேட் சூப்பரா இருக்கு.. லேசா வெயில் அடிச்சாலும் அப்பப்ப பெய்ற லேசான அந்த சாறல் மழை மனசை அப்படியே ஜிலுஜிலுன்னு ஆக்கிருது.. இந்த நேரத்துக்கு லன்ச் என்ன சாப்பிட்டா சூப்பரா இருக்கும்னு ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஆசை இருக்கும்.
ஆனால் இந்த கோவக்காய் புளிக்குழம்பு வச்சு, சூடா சாதம் வடிச்சு சாப்பிட்டுப் பாருங்க.. அப்படி இருக்கும் சாப்பிடவே.. அப்படி ஒரு டேஸ்ட்டான லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பியைத்தான் இப்ப பார்க்கப் போறோம்.. வாங்க பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோவக்காய் - 15
தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
வர மிளகாய் - 4
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
சீரகம் - 1/4 ஸ்பூன்
புளி - சிறிய உருண்டை அளவு (கழுவியது)
சின்ன வெங்காயம் - 6 (நறுக்கவும்)
பூண்டு - ஆறு பல்
வெந்தயம் - கால் ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
தக்காளி - 1
கறிவேப்பிலை மற்றும் மல்லித்தழை - ஒரு கைப்பிடி
செய்முறை
1. கோவக்காய் கழுவி நறுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெந்தயம், சின்ன வெங்காயம், பூண்டு, நாலு பல் போட்டு நன்றாக வதக்கவும்.
2. தேங்காய் துருவல் + சீரகம் +புளி தக்காளி நறுக்கி + வர மிளகாய் கறிவேப்பிலை + மல்லித்தழை + பூண்டு (2) மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
3. இக்கலவையை கடாயில் கோவக்காய் வதங்கியவுடன் சேர்க்கவும் + மல்லித்தூள் + மஞ்சள் + உப்பு போட்டு, எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.
4. சாதம் வடித்து / குக்கர் சாதத்துடன் கோவக்காய் புளி குழம்பு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.. சூப்பரான சுவையும் கூட.. கூட நாலு வாய் கபகபன்னு இறங்கும்.
மழைக்கால நேரத்தில், அட்டகாசமான லஞ்ச் பாக்ஸ் உணவு இது.. கூடவே ஹெல்தியான உணவும் கூட. இன்னிக்கு முடியாட்டி இன்னொரு மழை நாளில் கூட டேஸ்ட் பண்ணிப் பாருங்க.. அப்புறம் அடிக்கடி செஞ்சு சாப்பிடுவீங்க.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்