Vegetable Rava Kichadi.. சூடான வெஜிடபிள் ரவா கிச்சடி.. செய்வது ஈஸி.. சாப்பிட டேஸ்ட்டி!
- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: சூடான சுவையான வெஜிடபிள் கிச்சடி சாப்பிட்டிருப்பீங்க.. ரொம்பவே டேஸ்ட்டியான உணவுங்க இது. குழந்தைகளுக்கு இதை அடிக்கடி செஞ்சு கொடுக்கலாம்.. சத்தானது, சாப்பிடவும் டேஸ்ட்டியானது.
உப்புமா என்றால் குழந்தைகளுக்கு கொஞ்சம் பிடிக்காத உணவு.. அய்யே உப்புமாவா என்று முகம் சுளிப்பார்கள். கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் காலம் தொடங்கி நடிகர் விஜய் படம் வரை உப்புமா என்பது பேசு பொருளாகவே உள்ளது. அந்த அளவுக்கு பாப்புலரானது உப்புமா. ஆனால் பலருக்கும் இது பிடிக்காது.
எனவேதான், ரவா கிச்சடி என்று செய்தால் விரும்பி உண்பார்கள். ஈஸியான பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி இது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஈசியாக விரைவாக செய்ய உதவும். உணவு காய்கறிகளுடன் சாப்பிட்டால் சத்து கூடும். அவசரத்துக்கு கை கொடுக்கும் சிற்றுண்டி. கொஞ்சம் சாப்பிட்டாலும் முழு நிறைவு உண்டாகும் உணவு இது. நார்ச்சத்து உள்ள காய்கறிகள் சேர்த்து சமைப்பதால் கூடுதல் சக்தி கிடைக்கும். உடல் எலும்புக்கும் நரம்பு மண்டலத்திற்கும் நன்மை செய்யக்கூடியது. ரவையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது ரத்தசோகை வராமல் தடுக்கும் இதய நலத்திற்கு உதவுகிறது முழு உணவாக இருக்கும்.
சரி இந்த வெஜிடபிள் ரவா கிச்சடி எப்படி செய்யலாம்னு பார்க்கலாமா..
தேவையான பொருட்கள்
ரவை - ஒரு கப்
லவங்கம் கிராம்பு பட்டை - 4 +4
பச்சை மிளகாய் - 3
கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி (பொடியாக கட் செய்தது) - ஒரு கப் (பச்சை பட்டாணி பிரெஷ் காய் உதிர்த்தது) கறிவேப்பிலை மல்லித்தழை - ஒரு கைப்பிடி பொடியாக நறுக்கவும்
இஞ்சி + பூண்டு - ஒரு ஸ்பூன் கட் செய்தது
எண்ணெய் - 4 ஸ்பூன்
கடுகு உளுத்தம் பருப்பு - அரை ஸ்பூன்
பெரிய வெங்காயம் தக்காளி - 1 + 1 கட் செய்யவும்
உப்பு காரம் தேவைக்கு ஏற்ப
செய்முறை
1. அகன்ற கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு பிளஸ் உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கறிவேப்பிலை போடவும்.
2. இஞ்சி + பூண்டு தட்டியது சேர்க்கவும்.
3. கிராம்பு பட்டை பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி சிறிது உப்பு போடவும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்கவும் நன்றாக வதக்கவும்.
4. காய்கறி வேக அரை கப் தண்ணீர் ஊற்றவும்.
5. ரவை அளந்த கப்பில் இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும்.
6. கடாயில் தண்ணீர் கொதி வந்ததும் ரவை சேர்க்கவும். ஒரே சீராக போடவும். கட்டிப்படாமல் கலக்கவும்.
7. அனைத்தும் திரண்டு கெட்டியாக ஆகும் வரை அடுப்பை சிம்மில் வைத்து கிளறவும். சர்விங் பவுலுக்கு மாற்றவும். கம கம கிச்சடி ரெடி.
சூப்பரான சுவையான இந்த கிச்சடியை மல்லித்தழை தூவி பரிமாறவும். இதற்கு சட்னி குருமா செம சைட் டிஷ்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்