சூப்பர் ப்ளூ மூன் 2023... இன்று இரவு வானவேடிக்கை.. மிஸ் பண்ணிடாதீங்க!
Aug 30, 2023,04:44 PM IST
டெல்லி : இன்று இரவு வானில் அரிய நிகழ்வாக சூப்பர் ப்ளு மூன் நிகழ்வு நிகழ உள்ளது. சூப்பர்மூன் மற்றும் ப்ளூ மூன் ஆகிய இரண்டு ஒரே நேரத்தில் நிகழ உள்ளதால் இந்த அரிய நிகழ்வினை காண உலகமே ஆவலாக உள்ளது.
சூப்பர் மூன் என்பது வழக்கத்தை விட நிலா, பூமிக்கு மிக அருகில் வருவதால், நிலா பெரிதாக காட்சி தரும் நிகழ்வாகும். இதோடு ப்ளூ மூன் நிகழ்வும் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வரக் கூடிய இரண்டாவது பெளர்ணமி இன்று நிகழ உள்ளது. இந்த அரிய நிகழ்வு இரவு 08.37 மணியளவில் நடைபெற உள்ளது. இதை நாம் வெறும் கண்களால் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு முதல் ப்ளூ மூன் இன்று நிகழ உள்ளது. ஒரு மாதத்தில் இரண்டாவது பெளர்ணமி வரும் போது அது ப்ளூ மூன் என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 01 ம் தேதி ஒரு ப்ளூ மூன் தோன்றிய நிலையில், தற்போது இரண்டாவது முறையாக இன்றும் நிகழ உள்ளது. பூமியில் நீள்வட்ட பாதைக்கு அருகில் நிலா உள்ளதால் வழக்கத்தை விட பெரிதாகவும், அதிக வெளிச்சத்துடனும் காணப்படும்.
பொதுவாக ஒரு மாதத்திற்கு ஒரு பெளர்ணமி தான் வரும். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பெளர்ணமி வந்த நிலையில், இன்று இரண்டாவது பெளர்ணமி ஏற்பட்டுள்ளது. ஒரு ஆண்டில் 4 முழு நிலவுகள் வரும் போது 3வது முழு நிலவை ப்ளூ மூன் ஆக கருதிகிறோம். சூப்பர் மூன் மற்றும் ப்ளூ மூன் இரண்டும் இணைந்து வரும் இந்த அரிய நிகழ்வு அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஏற்படாது என சொல்லப்படுகிறது.