விட்டாச்சு லீவு.. என்ஜாய் செல்லம்ஸ்..  1  முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு  நாளை முதல் கோடை விடுமுறை

Meenakshi
Apr 23, 2024,12:37 PM IST

சென்னை: ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 23) முதல் கோடை கால விடுமுறை  என அறிவிக்கப்பட்டுள்ளது.


10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு ஏற்கனவே கோடை விடுமுறை  விடப்பட்டு விட்டது. இந்நிலையில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு தேர்வு கடந்த ஏப்., 2ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. 1-9 வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 12ல் தேர்வுகள் முடிக்கப்பட்டு விடுமுறை அறிவிக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு செயல்பட்டும் வந்தது.


இதற்கு இடையே 4 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 10, 12 ஆகிய நாட்களில் நடைபெறவிருந்து தேர்வுகள் ரம்ஜான் பண்டிகை மற்றும் தேர்தல் காரணமாக ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டது.அதன்படி ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றுடன் தேர்வுகள் முடிவடைவதால், நாளை முதல் இந்த வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது.




இந்நிலையில், வழக்கமாக பள்ளிகள் ஜூன் முதல் வாரத்தில் தான் திறக்கப்படும். ஆனால், இந்தாண்டு கடுமையான வெயில், மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ல் நடைபெறுதல் உள்ளட்ட காரணத்தினால்  இந்தாண்டு பள்ளிகள் தொடங்க காலதாமதம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கு ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.