10ம் வகுப்பு தேர்வுகள்.. இன்று முதல்.. All the very best.. நல்லா எழுதுங்க மாணவ மணிகளே!

Su.tha Arivalagan
Mar 26, 2024,10:00 AM IST

சென்னை:  10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. இதையொட்டி பல்வேறு அரசியல்  தலைவர்களும் மாணவ, மாணவியருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.


தமிழ்நாட்டில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன. இன்று முதல் ஏப்ரல் எட்டாம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வை கிட்டத்தட்ட 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்களும் 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகளும் என மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் எழுதுகிறார்கள். இதில் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர் ஒருவர். 




இந்த தேர்வுக்காக மொத்தம் 4017 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தனித் தேர்வர்களாக  கிட்டத்தட்ட 29 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். 2535 கைதிகளும் பொதுத்தேர்வு எழுதுகிறார்கள். தேர்வுகள் சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அனைத்து தேர்வு மையங்களிலும் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களைக் கண்காணிக்கவும் முறைகேடுகளைத் தடுக்கவும், பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.


தேர்வில் ஒழுங்கீனத்தில் ஈடுபடும் மாணவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வகுப்பறைகளில் குடிநீர், போதுமான காற்றோட்ட வசதி, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் தடையில்லா மின்சாரம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.