மார்ச் 30 - இன்றைய நாளின் முக்கிய சிறப்பு பற்றி தெரியுமா ?

Aadmika
Mar 30, 2023,08:34 AM IST

இன்று மார்ச் 30 வியாழக்கிழமை

சுபகிருது ஆண்டு பங்குனி 16

ஸ்ரீராம நவமி, வளர்பிறை, சமநோக்கு நாள்


இன்று நாள் முழுவதும் நவமி. மார்ச் 29 ம் தேதி இரவு 11.49 முதல் மார்ச் 31ம் தேதி அதிகாலை 01.40 வரை நவமி திதி உள்ளது. இன்று நாள் முழுவதும் புனர்பூசம் நட்சத்திரம் உள்ளது. காலை 06.14 வரை சித்தயோகம், பிறகு அமிர்தயோகம்.




நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - கிடையாது

மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


இன்று என்னென்ன காரியங்கள் செய்யலாம்?


திருமணம் செய்வதற்கு, நோய்க்கான மருந்து சாப்பிட துவங்குவதற்கு, புதிய ஆபரணங்கள் அணிவதற்கு, வாகனம் வாங்குவதற்கு நல்ல நாள்.


இன்றைய நாளுக்கு என்ன ஸ்பெஷல்?


இன்று ஸ்ரீ ராம பிரான் அவதரித்த ஸ்ரீ ராம நவமி. இன்று ராமரை வழிபட சகல செளபாக்கியங்களும் ஏற்படும்.