Kerala Tour: குவார்ட்டர்லி லீவுக்குப் போன கேரளா டூர்.. காரைக்குடி லெட்சுமணனின் கலகல அனுபவம்!

Su.tha Arivalagan
Oct 07, 2024,01:48 PM IST

சென்னை: காலாண்டு விடுமுறை முடிஞ்சு எல்லோரும் ஸ்கூலுக்கு வந்தாச்சு.. இந்த நிலையில் தனது குடும்பத்தினருடன் காலாண்டு விடுமுறையின்போது கேரளாவுக்கு சுற்றுப்பயணம் செய்து திரும்பிய நமது வாசகர் காரைக்குடியைச் சேர்ந்த லட்சுமணன் தான் கேரளா போய் வந்த ஜாலியான அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துள்ளார்.. வாங்க பார்க்கலாம்.


காரைக்குடியில் இருந்து பேருந்தில் திண்டுக்கல் வரை சென்று அங்கிருந்து கார் மூலமாக ஒட்டச்சத்திரம், பழனி, பொள்ளாச்சி வழியாக கொல்லங்கோடு சென்றோம்.  கொல்லங்கோடு செல்லும் வழியில் கணபதி பாளையத்தை அடுத்து மீன்கரை அணை என்று ஒன்று உள்ளது. மீன்கரை அணை மிக பிரம்மாண்டமாக இருக்கின்றது. மீன்கரை அணையில் மணல் எடுத்து வெளியே கொட்டியுள்ளனர். ஒரு யூனிட் மணலின் விலை rs.7000. அதனை நாம் இயல்பாக வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்கள். மீன்கரை  அணையின் ஒரு பகுதியில் நாம் குளிக்கலாம். மிக அருமையான இடமாக இருக்கின்றது.


மனம் மயக்கும் மீன்கரை அணை:




காலையில் சாப்பாடு கட்டிக்கொண்டு அங்கே சென்று  ஒரு நாள் முழுவதும் அந்த இடத்திலேயே இருந்து நமது குழந்தைகளை விளையாட விட்டுவிட்டு சாப்பிட்டுவிட்டு மிக இயல்பாக குளிக்கவும் செய்து மீண்டும் திரும்பி வரலாம். நாங்கள் மீன்கரை அணையிலிருந்து அடுத்ததாக சுள்ளியாறு அணைக்குச் சென்றோம். சுள்ளியாறு அணை மீன்கள் அதிகமாக இருக்கும் இடம் என்று தெரிவித்தார்கள். சுள்ளியாறு அணை மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்கள்.  


சுள்ளியாறு அணையின்  உள்ளே செல்வதற்கு முன்பாக தோழர் மோகன் அவர்களிடம் இருந்து தகவல் வந்தது. இரண்டரை மணிக்குள்ளாக நீங்கள் நெல்லி ஏந்தல் செக்போஸ்ட் கடக்க  வேண்டும் என்று தெரிவித்தார்கள். எனவே நாங்கள் ஒன்றரை மணிக்கெல்லாம் அங்கிருந்து கிளம்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.


கொல்லங்கோட்டில்  தோழர் பிரதீப் அவர்களது நண்பர் மோகன்  அவர்களின் உதவியுடன் இந்தியாவிலேயே மூன்றாவதாக உள்ள சிறந்த கிராமம் ஆகிய கொல்லங்கோடு குடிலிடத்தை  பார்வையிட்டோம். மிகப்பெரிய விவசாய பகுதியில் பல்வேறு விதமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் அமைக்கப்பட்டிருந்தது. அதனை கண்டு ரசித்த பிறகு நெம்மாராவில் உள்ள  ஸ்ரீ சரவணபவன் ஹோட்டல் நல்ல முறையில் மதிய உணவை சாப்பிட்டோம். 


சீத்தார் குண்டு:




அங்கிருந்து இரண்டரை மணிக்கு நெல்லியேந்தல்  செக் போஸ்டை அடைந்தோம். ஏனென்றால் இரண்டே முக்கால் மணிக்கு பிறகு நெல்லியேந்தல் மலை மேலே  செல்ல அனுமதி இல்லை. எனவே இரண்டு முப்பத்தி ஐந்து மணிக்கெல்லாம் நெல்லியேந்தல் செக்போட்டை அடைந்த பிறகு அங்கே பணம் கட்டி மேலே ஏற அனுமதிக்கின்றனர்.  அங்கிருந்து மிக குறுகலான மலைகளின் வழியாக தெளிவான பாதைகளின் வழியாக சென்று, ஒன்றரை மணி நேர பயணத்திற்கு பிறகு சீத்தார் குண்டு என்கிற பகுதியை சென்றடைந்தோம்.


சீத்தார் குண்டு மிக அருமையான வியூ கிடைக்கின்றது. செல்லும் வழியெல்லாம் பச்சை பசேலென்று இருக்கின்றது. மிக உயரமான மீண்டும் மிகவும் தாழ்வான மீண்டும் மிகவும் உயரமான அடர்த்தியான காடுகளின் வழியே பயணிப்பது மனதிற்கு இதமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. சீத்தார் குண்டு செல்லும் வழியில் சிங்கவால் குரங்கு பலவற்றை பார்த்தோம். அவை மிக இயல்பாக மனிதர்களின் வண்டியில் ஏறி கண்ணாடியில் அமர்ந்து கொள்கின்றன.  நன்றாக குளிரும் என்று கூறினார்கள். ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குளிர் அதிகமாக இல்லை. 


மாலை 5 மணி அளவில் சீத்தார் குண்டு வியூபாயிண்ட் தேநீர்  குடித்துவிட்டு , மீண்டும்  அங்கேயே டீத்தூள், காபித்தூள் ஆகியவையும்  வாங்கிக்கொண்டு அங்கிருந்து நாங்கள் ஆர்கானிக் பார்ம் சென்றோம். ஆர்கானிக் பார்ம்  5 மணியுடன் முடிவடைந்து விட்டதால் வெளியே நின்று போட்டோ எடுத்துக்கொண்டு வந்துவிட்டோம். அடுத்ததாக அருகில் உள்ள கேசவ பாரா வியூ பாயிண்டை  நோக்கி பயணமானோம். மிகவும் அட்டை பூச்சிகள் நிறைந்ததாகவும், ஒன்றரை கிலோ மீட்டருக்கு மேல் நடந்து செல்ல வேண்டியதாக இருந்தது.


போத்துண்டி அணை:




மாலை 5 மணிக்கு மேல் ஆகிவிட்டதால் அங்கே செல்வது சாத்தியமில்லை என்று தெரிவித்தார்கள். எனவே போத்துண்டி  டேமை பார்ப்பதற்காக விரைந்து வந்தோம். ஏனெனில்  போத்துண்டி அணை  இடமானது உள்ளே செல்ல மாலை 6 மணியோடு முடிந்துவிடும் என்று கூறினார்கள். விடுமுறை நாட்களில் மட்டும் 6 மணி வரை செயல்படும் என்று தெரிவித்ததால் நாங்கள் சென்றது ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆறு  மணிக்கெல்லாம் உள்ளே சென்றுவிட்டோம்.


போத்துண்டி மிகப்பெரிய அணை பல்வேறு விதமான விளையாட்டு அமைப்புகள் உள்ளே வைத்திருக்கின்றனர். அட்வெஞ்சர் குறிப்பாக கம்பியில் அந்தரத்தில்  நடந்து  செல்வது,சைக்கிளில் கம்பியில் அந்தரத்தில் ஒட்டி செல்வது , தண்ணீரில் நீச்சல் அடிப்பது, மோட்டார் வாகனத்தை இயக்குவது துப்பாக்கி சுடுவது, வில்லிலிருந்து அம்பு விடுவது  என பல்வேறு வகையான பணம் வசூலிக்கும் விளையாட்டுகளை வைத்திருக்கின்றனர்.


மக்கள் கூட்டம் எண்ணில் அடங்காமல் வந்து செல்கின்றது. அணை ஒரு பக்கம் இயற்கையாக இருந்தாலும், கேரள அரசு இது போன்று வருவாய் வருமானத்திற்காக பல்வேறு வேலைகளை செய்துள்ளது. நாங்கள் போத்துண்டி அணையில்  ஒரு மணி நேரம் செலவழித்து விட்டு 7 மணி அளவில் கிளம்பி மீண்டும் நெம்மாரா அருகில்  உள்ள ஸ்ரீ சரவணபவன் ஓட்டலில் மாலை தேநீர் அருந்தினோம் .


பாலக்காடு:




தோழர் மோகன் அவர்களும் எங்களுடன் வந்து தேனீர் அருந்தினார். எங்களை நல்ல முறையில் உபசரித்து பார்த்துக்கொண்டார். அங்கிருந்து தோழர் பிரதீப்  அவர்களின் ஆலோசனையின்படி பாலக்காடு பயணமானோம். பாலக்காட்டில் கே எஸ் டி டி சி என்கிற அரசு ஹோட்டலில் அறை எடுத்து தங்கினோம்.  அதற்கான ஏற்பாடுகளை தோழர் பிரதீப் அவர்கள் செய்திருந்தார்கள். இந்த அறையானது மலம்ழா டாமின்  உள்ளே அமைந்துள்ளது. குளிராக இருக்கும் என்று கூறினார்கள். ஆனால் நாங்கள் சென்ற பொழுது நல்ல வெயில். எனவே குளிர் அதிகமாக இல்லை.


இரவு உணவு ஆர்யா ஹோட்டலில் முடித்து அறையில் சென்று தங்கினோம். இவ்வாறாக முதல் நாள் பயணம் நிறைவு பெற்றது இரண்டாம் நாள் பயணம் தொடரும்.. வெயிட் பண்ணுங்க அதையும் சொல்றோம்.


கட்டுரை - புகைப்படங்கள்:

லெட்சுமணன், காரைக்குடி



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்