தமிழ்நாடு முழுவதும்.. இன்று சிறப்பு கல்விக் கடன் முகாம்கள்.. யூஸ் பண்ணிக்கங்க மாணவர்களே!
சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் சார்பாக இன்று சிறப்பு கல்விக் கடன் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கல்விக் கடன் முகாம்கள் காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெறும். பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகள் இந்த முகாம்களில் பங்கேற்கின்றனர். மாணவர்கள் தங்களுக்குத் தேவையான கல்விக் கடனை பெற இந்த முகாமை பயன்படுத்திப் பலன் பெறலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்த முகாமில் பங்கேற்க விரும்புவோர் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்:
மாணவர்களின் பான் கார்டு, மாணவர்களின் ஆதார் அட்டை, மாணவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாணவரின் வருமானச் சான்று, மாணவர்கள் ஏற்கனவே கடன் வாங்கி இருந்தால் அது குறித்த விபரம், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பான் கார்டு, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வருமானச் சான்று, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கடன் விபரங்கள், வருமானச் சான்றிதழ் ஏதேனும் இருந்தால், சாதி சான்றிதழ், கல்வி பதிவுகளின் சான்று அதாவது 10 12 மற்றும் பட்டப் படிப்பு மதிப்பெண் பட்டியல், சேர்க்கை சான்று அதாவது கவுன்சிலிங் கடிதம் கல்லூரி அனுமதி சேர்க்கை கடிதம், நீட் நுழைவு தேர்வு முடிவு, கல்லூரி கட்டண விபரம், முதல் பட்டதாரி சான்று மற்றும் உறுதிமொழிச் சான்று, கடன் பெரும் வங்கியின் பெயர் மற்றும் பாஸ்புத்தகம், கல்லூரி ஒப்புதல் கடிதம்.
இந்த கல்விக் கடன் முகாமில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கரூர் வைஸ்யா வங்கி, எச்டிஎப்சி உள்ளிட்ட பல்வேறு முன்னணி வங்கிகள் கலந்து கொள்ள்ளவுள்ளன.