லோக்சபா தேர்தலை முன்னிட்டு.. இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. போக்குவரத்து கழகம் அறிவிப்பு!
சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, நேற்று போலவே இன்றும் தமிழ்நாடு முழுவதும் 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதற்காக பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணிப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளில் இருந்து 807 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டு, மொத்தம் 2,899 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் சுமார் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்றும் பொதுமக்கள் பல்வேறு பகுதிகளுக்கும், சிரமம் இல்லாமல் பயணித்து தங்களின் வாக்குகளை செலுத்த ஏதுவாக தமிழக அரசு
சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அதன்படி தமிழக முழுவதும் 10 ஆயிரத்து 214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில் சென்னையில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட 777 பேருந்துகள் உட்பட மொத்தம் 2,692 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இதுவரை சென்னையிலிருந்து 17,000 பேர் உட்பட தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 30,000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
21ஆம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கம்:
வாக்களித்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பும் வகையில் ஏப்ரல் 21ஆம் தேதி 24,000 மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
மேலும் tnstc செயலி மற்றும் www. tnstc.in என்ற இணையதளம் வாயிலாக முன் பதிவு செய்யலாம் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.