கேரளாவில்.. அடுத்த 5 நாட்களில்.. தென்மேற்கு பருவ மழை.. தொடங்க வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு

Manjula Devi
May 27, 2024,06:16 PM IST

சென்னை:  கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களில் தென்மேற்கு பருவ மழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


ஒவ்வொரு வருடமும் தென்மேற்கு பருவ மழை  ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை உள்ள காலகட்டத்தில் மழைப்பொழிவு இருக்கும். இந்த முறை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இந்த வருடம் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை  தொடங்கியது. இதனை தொடர்ந்து அடுத்து கேரளாவில்  தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.




இன்னும் ஐந்து நாட்களில் கேரளாவுக்கு தென் மேற்குப் பருவ மழை வந்து சேரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் கேரளாவில் மழையை வரவேற்கும் ஆயத்த நிலைக்கு மக்கள் மாறி வருகின்றனர்.


இதற்கிடையே தமிழகத்தில் கோடை மழை பரவலாக பெய்து வந்த நிலையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் எனவும்  எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.


தெற்கு அரபிக்கடல் பகுதி, மாலத்தீவு, கன்னியாகுமரி பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களில் தென்மேற்கு பருவ மழை தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுவதாக தெரிவித்துள்ளது.