சோனியில்.. ஏப்ரல் 22 முதல்.. உங்கள் மனம் கவர்ந்த மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி.. புதுப்பொலிவுடன்!

Manjula Devi
Apr 18, 2024,10:28 AM IST
சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏப்ரல் 22 முதல் sony லைவ் சேனலில் மாஸ்டர் செஃப் சமையல் நிகழ்ச்சி உலக அளவில் ஆரம்பமாக உள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் வரும் இந்த மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சி உலக அளவில் எண்ணற்ற ரசிகர்களை கொண்டுள்ளது. தமிழ் மக்கள் தெலுங்கு பேசும் மக்களது பிராந்திய உணவு முறைகளையும், சிறப்பான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட சுவைகளையும், உணவு வகைகளையும் கொண்டாடி மகிழும் ஒரு நிகழ்வாகும். இதில் பிரபல சமையல் கலை நிபுணர்களான செஃப் கௌசிக் சங்கர், செஃப் ஸ்ரேயா அட்கா, செஃப் ராகேஷ் ரகுநாதன் ஆகியோர் தமிழ் பதிப்பிலும் மற்றும் செஃப் சஞ்சய் தும்மா, நிகிதா உமேஷ் மற்றும் செஃப் சலபதி ராவ் ஆகியோர் தெலுங்கு பதிப்பிலும் பங்கேற்க உள்ளனர்.





இதுவரை யாரும் கண்டிராத சுவையான சமையல் திறன் கொண்ட இந்த நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் உறுதியாக சொல்கின்றனர். இந்தியாவின் கலாச்சார மரபுகளையும், பாரம்பரியங்களையும் வெளிப்படுத்தும் இந்நிகழ்ச்சியை கண்டு மகிழ தயார் ஆகுங்கள். சமையலுக்கு பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும், செய்முறை குறிப்பிலும், ரெசிபிகளிலும் பல தலைமுறைகள் வரலாற்று பின்னிப்பிணைந்து இருப்பதை இந்நிகழ்ச்சி அழகாக  எடுத்துரைக்க உள்ளதாம்.

சுவையான பயணத்தை நாங்கள் தொடங்கும்போது எங்களுடன் இணைந்து எமது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள்எ ன்று சோனி லைவ் டிவி அன்புடன் கோரியுள்ளது.