புதிய உச்சத்தில் வெள்ளி விலை... தொடர் உயர்வில் தங்கம்... அதிர்ச்சியில் மக்கள்

Meenakshi
May 29, 2024,11:54 AM IST

சென்னை: வெள்ளி விலை புதிய உச்சம் தொட்டுள்ளது. கிராமுக்கு ரூ.1.20 காசுகள் உயர்ந்து இன்று ரூ.102.20க்கு விற்கப்படுகிறது. தங்கமும் இன்று உயர்ந்துள்ளது.


தங்கமும் வெள்ளியும் மாறி மாறி உயர்ந்து வருகிறது. தங்கமும் வெள்ளியும் விலையில் புதிய உச்சத்தை தொட்டு வருவதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்து வருகின்றனர். நாட்டில் நிலையற்ற பொருளாதார நிலை காரணமாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது.  டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதும் தங்கத்தின் விலை உயர காரணமாக கூறப்படுகிறது. மேலும், இந்தியா மட்டும் இன்றி, தற்போது வெளி நாடுகளில் வாழும் மக்களும் அதிகப்படியாக தங்கத்தில் முதலீடு செய்யும் நிலை அதிகரித்து உள்ளது. 




கடந்த சில மாதங்களில் மட்டும் சீனா சுமார் 74 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பத்திரங்களை விற்று தங்கத்தை வாங்கி வருகிறது. சீனா மட்டுமின்றி அனைத்து வளரும் நாடுகளும் தொடர்ந்து தங்கத்தை வாங்கி வருகின்றன. அனைத்து நாட்டினர்களும் தங்கத்தை வாங்கி வருவதால் தங்கம் விலை உயர்ந்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.


இன்றைய தங்கம் விலை...


இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை,  1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,775 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 35 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.280 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,200 ரூபாயாக உள்ளது.


 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,391 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.59,128 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 ஆக உள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.960 உயர்ந்துள்ளது.


இன்றைய வெள்ளி விலை...


தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் உயர்ந்தே உள்ளது. அதுவும் வெள்ளி விலை புதிய உச்சம் தொட்டுள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி ரூ.1.20 காசுகள் உயர்ந்து ரூ.102.20 ஆக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 817.60 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை   நேற்று ரூ.1,01,000 விற்கப்பட்டது இன்று ரூ.1,02,200 விற்கப்படுகிறது.