என்னங்க சொல்றீங்க..? ஷாருக்கானுக்கு நிலாவில் சொந்தமா இடம் இருக்கா?

Aadmika
Aug 26, 2023,12:07 PM IST

மும்பை : பாலிவுட் சூப்பர் ஹீரோவான ஷாருக்கானுக்கு நிலவில் சொந்தமாக இடம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் அனைவரையும் ஆச்சரியத்தை ஆழ்த்தி உள்ளது.


திரை பிரபலங்கள் பிரம்மாண்டமாக சொகுசு கார், வீடு வாங்குவது, வெளிநாட்டில் வீடு வாங்குவது எல்லாம் இப்பொழுது சர்வ சாதாரணமாகி விட்டது. அப்படி பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கும் ரசிகர்கள் மட்டுமல்ல சொத்துக்களும் அதிகம். அவர் தற்போது வசித்து வரும் வீடான மன்னத், கிட்டதட்ட அரண்மனைக்கு சமமானது தான். அத்தனை பிரம்மாண்டம் அதில் உள்ளது. இது பற்றிய தகவல்கள் ஏற்கனவே வெளியாகி விட்டன. இப்போது லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் ஷாருக்கானு நிலாவில் சொந்தமாக இடம் உள்ளது என்ற தகவல் தான்.




நீங்க நம்பினாலும் நம்பா விட்டாலும் இது உண்மை தானாம். ஷாருக்கானின் அதி தீவிர ரசிகையான ஆஸ்திரேலியாவை சேர்ந்த சாண்டி என்பவர் ஷாருக்கானுக்காக நிலாவில் இடம் ஒன்றை வாங்கி இருக்கிறாராம். இதற்கு sea of tranquility  என்று பெயர் வேறு வைத்துள்ளாராம். 2009 ம் ஆண்டு டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்த ஷாருக்கான இதை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.


நிலவில் தனது பெயரில் நிலம் இருப்பதற்கான சான்றிதழையும் ஒவ்வொரு ஆண்டும் Lunar Republic society அனுப்பி வருவதாக ஷாருக்கான் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த அந்த பெண் ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்த நாள் பரிசாக தனக்காக நிலவில் சிறிய அளவிலான நிலம் வாங்கி அனுப்பி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இப்போது வரை அந்த பெண் நிலம் வாங்கி அனுப்பி வருகிறாராம். உலகம் முழுவதும் இது போன்ற பல அற்புதமான மனிதர்களின் அன்பை பெற்றது மகிழ்ச்சியாக உணர்வதாக ஷாருக்கான தெரிவித்துள்ளார்.


நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியன கடந்த இரண்டு நாட்களாக தான் நிலவில் ஆய்வு பணியையே துவக்கி உள்ளன. அதற்குள் நிலாலேயே  ஷாருக்கானுக்கு சொந்த நிலம் இருப்பதாக அவர் 2009 ல் பேசிய வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது.


ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கிய ஜவான் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் படமான ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து புதிதாக சில படங்களில் நடிப்பதற்கும் ஷாருக்கானிடம் பேசப்பட்டு வருகிறதாம்.