உலகிலேயே மிகப் பழமையான மனித ஜீன்.. தெற்கு ஸ்பெயினில் கண்டுபிடிப்பு!
Mar 04, 2023,09:13 AM IST
பெர்லின்: உலகிலேயே மிகப் பழமையான மனித ஜீன் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
23,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதன் ஜீன் கட்டமைப்புதான் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மனிதன் வாழ்ந்த இடம், கடைசி ஐஸ் காலத்தின் உச்ச காலகட்டத்தில் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இப்பகுதி அப்போது ஐரோப்பிவிலேயே சற்று வெப்பமான பகுதியாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தெற்கு ஸ்பெயினில் உள்ள குவேவா டெல் மலமுஸெர்சோ என்ற இடத்தில்தான் இந்த ஜீனோம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினின் குவேவா டி ஆர்டெலஸ் பகுதியில் 7000 முதல் 5000 ஆண்டுகள் பழையான ஜீன்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட ஜீன் அமைப்புதான் உலகிலேயே மிகப் பழமையான ஜீன் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
தெற்கு ஸ்பெயினின் அன்டலுசியா பகுதியில் பல்வேறு நாட்டு ஆய்வுக் குழுவினர் பல்வேறு வகையான மனித ஜீன்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பகுதியில் கிடைத்துள்ள ஜீன்களின் டிஎன்ஏ குறித்த ஆய்வுகளும் தொடர்ந்து கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.