Electoral Bonds data: சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி.. தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியது எஸ்.பி.ஐ.!

Su.tha Arivalagan
Mar 12, 2024,07:30 PM IST

டெல்லி: தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இன்று மாலை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா.


தேர்தல் பத்திர விவரங்களை இன்று மாலைக்குள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் கோர்ட் அவமதிப்பை சந்திக்க நேரிடும் என்று நேற்று சுப்ரீம் கோர்ட் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து இன்று மாலை சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்து விட்டது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா.




இந்த விவரங்களை தேர்தல் ஆணையம் சரி பார்த்து வருகிற வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் தனது இணையதளத்தில் வெளியிட வேண்டும். இருப்பினும் கோர்ட் உத்தரவை நிறைவேற்றி விட்டோம் என்ற தகவலை ஸ்டேட் வங்கி சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்கவில்லை. அதுதொடர்பான அபிடவிட் தயாராக இருப்பதாகவும், ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் வங்கியின் தலைவர் - நிர்வாக இயக்குநர் தாக்கல் செய்யவில்லை என்றும் என்டிடிவி செய்தி கூறுகிறது.


2018ம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் திட்டம் நடைமுறைக்கு வந்தது. அப்போது முதல் இதுவரை, ஸ்டேட் வங்கியானது, 20 நாடு முழுவதும் உள்ள தனது 30 கிளைகள் மூலமாக ரூ. 16,518 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.