பிறை தெரிந்தது.. சவூதி அரேபியா, வளைகுடா நாடுகளில் ரம்ஜான் கொண்டாட்டம்.. இந்தியாவில் நாளை!

Su.tha Arivalagan
Mar 30, 2025,04:59 PM IST

ரியாத்:  சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பிறை தெரிந்ததைத் தொடர்ந்து ஈத் உல் பிதர் எனப்படும் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படவுள்ளது.


வழக்கமாக சவூதி அரேபியாவுக்கு அடுத்த நாள்தான் இந்தியாவில் ரம்ஜான் கொண்டாடப்படும். அந்த வகையில் இன்று சவூதியில் கொண்டாடப்படுவதால்  இந்தியாவிலும் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும். வளைகுடா நாடுகளில் இன்று கோலாகலமாக ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.




புனிதமான ரமதான் மாத முடிவைத்தான் ரம்ஜான் பண்டிகையாக கொண்டாடுகிறார்கள். 30 நாள் நோன்புக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 


இந்தியாவில் ரமதான் மாதம் மார்ச் 2ம் தேதி தொடங்கியது. அதேசமயம், சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் மார்ச் 1ம் தேதி நோன்பு தொடங்கியது.


இந்திாயவில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படவுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவிலும் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும் என்று அந்த நாட்டு இமாம்கள் கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.