தன் பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

Aadmika
Oct 17, 2023,12:30 PM IST
டில்லி : தன் பாலின திருமணங்களை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க வேண்டும் என கேட்டு தொடரப்பட்ட வழக்கில் அனுமதி அளிக்க முடியாது என் சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஒரே பாலினத்தை சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொள்வதை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக அங்கீகாரம் வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் ஓரின சேர்க்கையாளர்கள் பலர் மனுத்தாக்கல் செய்தனர். மொத்தம் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கு மே 11 ம் தேதி சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி சந்திரசூத் தலையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுக்கள் மீது தொடர்ந்து 10 நாட்கள் விசாரணை நடந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு 4 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றப்பட்டது.





சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சவீந்திர பட், ஹிமா கோஹ்லி, பி.எஸ்.நரசிம்மா ஆகிய நான்கு நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. இதில் நான்கு நீதிபதிகளும் நான்கு விதமாக தீர்ப்புகள் வழங்கி உள்ளனர். அதில், தன்பாலின திருமணம் என்பது  கிராமப்புற வழக்கமோ அல்லது உயர் சமூகத்தினருக்கு தடை செய்யப்பட்டதோ கிடையாது. சிறப்பு திருமண சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது பற்றி பாலிமென்ட் தான் முடிவு செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி சந்திரசூத் தெரிவித்துள்ளார். சிறப்பு திருமண சட்டத்தை ரத்து செய்தால் நாடு சுதந்திரத்திற்கு முன் இருந்த நிலைக்கு சென்று விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒருவர் தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்வது அவரின் உரிமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தலைமை நீதிபதியின் கருத்தை தான் முழு மனதுடன் ஏற்பதாக நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கூறிய நிலையில் இதை ஏற்க முடியாது என ரவீந்திர பட் தெரிவித்தார். இதனால் இது குறித்து முடிவு செய்ய மேலும் அவகாசம் தேவை என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. அதே சமயம் தன்பாலின ஜோடிகள் ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள முடியும் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.  5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இடம்பெற்றுள்ள 3 நீதிபதிகள் தன் பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளனர். இருவர் மட்டுமே, தங்களின் துணையை தேர்வு செய்யும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு என கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்த இந்த வழக்கில் ஓரின சேர்க்கையாளர்கள் அடுத்த கட்டமாக மேல்முறையீடு செய்வதற்கும் வாய்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை அவர்களின் கோரிக்கையை ஏற்று அங்கீகாரம் வழங்கும் பொறுப்பு பார்லிமென்ட் வசம் செல்லவும் வாய்ப்புள்ளது