காஷ்மீரில் பூத்த "செந்தாமரை".. சிம்ப்ளி கியூட்டாக மாறி.. சிலிர்க்க வைத்த சாய் பல்லவி!
Jul 15, 2023,11:42 AM IST
ஜம்மு : அமர்நாத் யாத்திரை சென்ற நடிகை சாய் பல்லவி தனது காஷ்மீர் பயண அனுபவங்களை போட்டோக்களுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரின் இந்த வீடியோக்களும், போட்டோக்களும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
ரொம்ப சிம்பிளானவர் சாய் பல்லவி. வெளித் தோற்றத்தில் மட்டுமல்ல.. மனதளவிலும் ரொம்ப அழகானவர். காசு பார்க்க வேண்டுமே என்று வருகிற படங்களையெல்லாம் அள்ளிப் போட்டுக் கொள்பவரும் கிடையாது. பார்த்துப் பார்த்து நிதானமாக அழகான படங்களில் மட்டுமே நடித்து வருபவர்.
மலையாளத்தில் டைரக்டர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகனவர் சாய் பல்லவி. அதில் மலர் டீச்சராக வந்து மலையாள ரசிகர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களை கவர்ந்து விட்டார். தொடர்ந்து பல படங்களில் நடித்த சாய் பல்லவி தமிழில் தனுஷ் நடித்த மாரி 2 படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுத்தார். இதில் ரவுடி பேபி பாடலுக்கு செம ஆட்டம் போட்டு, உலக அளவில் பிரலமாகி விட்டார்.
நல்ல டான்சர் என்பதை பல படங்களில் நிரூபித்துள்ள சாய் பல்லவி.. தான் ஒரு சூப்பர் பெர்பார்மர் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருபவர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி, தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக எஸ்கே 21 படத்தில் நடித்து வருகிறார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் தான் காஷ்மீரில் எடுத்துக் கொண்ட போட்டோக்கள், வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனால் ரசிகர்கள் பலர் எஸ்கே 21 ஷூட்டிங்கா அல்லது வேறு ஏதாவது படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடக்கிறதா? இது எந்த பட ஷூட்டிங் என கேட்க துவங்கி விட்டனர்.
இதற்கு நீண்ட பதிவின் மூலம் பதிலளித்துள்ள சாய் பல்லவி, நான் எனது தனிப்பட்ட உணர்வுகளை எப்போதும் பொது வெளியில் பகிர்வது கிடையாது. ஆனால் இது 60 பேர் எமோஷன். மிக த்ரில்லிங்கான அனுபவம், சவாலான அமர்நாத் யாத்திரை நிறைவு செய்து விட்டேன். எனது பெற்றோருடன் அமர்நாத் யாத்திரை சென்று விட்டு திரும்பிக் கொண்டிருக்கிறேன் என தனது உ.ணர்வுகளை பகிர்ந்து பதிலளித்துள்ளார். அதோடு தன்னலம் பார்க்காமல் யாத்திரீகர்களை பாதுகாக்கும் துணை ராணுவ படையினர் உள்ளிட்டோருக்கும் சாய் பல்லவி நன்றி தெரிவித்துள்ளார்.