பிரதமரை சந்தித்ததில்..எந்த அரசியலும் கிடையாது..அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!

Manjula Devi
Mar 05, 2024,06:09 PM IST

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி-அமைச்சர் பி.டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு பேசு பொருளாகி உள்ள நிலையில், பிரதமரை சந்தித்ததில் எந்த அரசியலும் கிடையாது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.


கடந்த வாரம் இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக  பல்லடத்தில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதனை அடுத்து மதுரைக்குச் சென்று அங்கு தொழில் முனைவோர் கூட்டத்தில் பங்கேற்ற பின் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து அன்று இரவு மதுரை பசுமலையில் உள்ள தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்தார். அப்போது அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், பிரதமர் மோடியை சந்தித்து பேசி உள்ளதாகவும், இந்த பேச்சு பத்து நிமிடம் நீடித்ததாகவும் சமூக வலைதளங்களில் பாஜகவினர் தகவல்கள் பரப்பி வந்ததனர்.




இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் தெரிவித்து கூறுகையில், அரசாங்கத்தை சிறப்பாக நடத்துவது என்பது சாதாரண பணி கிடையாது. அதெல்லாம் கடந்து தான் நாங்களும் முதல்வரும் பணி செய்து வருகிறோம். பிரதமருக்கும் எனக்கும் தனிப்பட்ட உறவு இருப்பது போல் செய்தி வந்துள்ளது. முதல்வர் கொடுத்த பணியை தான் நான் செய்தேன். அதனால்தான் மதுரைக்குச் சென்று பிரதமரை சந்தித்து வழி அனுப்பி வைத்தேன். அதில் எந்த அரசியலும் கிடையாது. அரசாங்க பணியை தான் நான் செய்தேன் என கூறியுள்ளார் .