பிரதமர் மோடியின் சென்னை,  திருச்சி, ராமேஸ்வர பயணம்.. ஆர்டிஐ மூலம் விவரம் கேட்கும் வக்கீல் துரைசாமி

Meenakshi
Jan 27, 2024,06:50 PM IST

சென்னை: சென்னை, திருச்சி , ராமேஸ்வரம் உள்ளிட்ட மாவட்டங்களில்  பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட பயணம் தனிப்பட்ட முறையிலானதா? அல்லது அலுவல் ரீதியானதா? என தகவல் உரிமைச் சட்டத்தில் கீழ் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ் துரைசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 19, 20, 21 ஆகிய 3 நாட்கள் தமிழகத்தில்  பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த பயணத்தின் போது முதல் நாளில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு  போட்டிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. அடுத்த நாள் திருச்சிக்கு சென்று ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்தார். அதன் பின்னர் மறுநாள் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று அக்னி தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்து,  அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு புனிதர் நீர் எடுத்துக்கொண்டார்.


பிறகு 21ம் தேதி அரிச்சல் முனை கடற்கரைக்கு சென்ற பிரதமர் மோடி தனுஷ்கோடியில் உள்ள கோதண்டராமர் கோவிலில் சாமிதரிசனம் செய்தார். பிறகு அங்கிருந்து மதுரை வந்து, அங்கிருந்து டெல்லி சென்றார்.




இந்நிலையில் பிரதமர் மேற்கொண்ட தமிழக பயணம் குறித்து மூத்த வழக்கறிஞர் துரைச்சாமி பல்வேறு கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை, திருச்சி , ராமேஸ்வரம் உள்ளிட்ட மாவட்டங்களில்  பிரதமர் மோடி மேற்கொண்ட பயணம் தனிப்பட்ட முறையிலானதா? அல்லது அலுவலக ரீதியானதா? அவருடைய பயணச் செலவை ஏற்றது யார் உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பி  தகவல் உரிமை ச் சட்டத்தில் கீழ் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ் துரைசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.