ஸ்பெஷல் நியூஸ்.. 1008 சிறப்புக் குழந்தைகளை.. திருப்பதிக்கு அழைத்துச் செல்லும்.. ரோட்டரி கிளப்!

Su.tha Arivalagan
Aug 03, 2024,02:44 PM IST

சென்னை: திருப்பதி தேவஸ்தான சென்னை அலுவலகத்துடன் இணைந்து சென்னை ரோட்டரி கிளப் ஒரு சிறப்பான சுற்றுப் பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி 1008 சிறப்புக் குழந்தைகளை சிறப்பு ரயில் மூலம் திருப்பதிக்கு அழைத்துச் செல்லவுள்ளனர்.


திருப்பதிக்கு சென்று சாமி கும்பிட்டு அந்த ஆன்மீக அனுபவத்தை பெற அனைவருமே விரும்புவார்கள். அப்படிப்பட்ட இறை அனுபவத்தை சிறப்புக் குழந்தைகளுக்கும் கொடுக்க ரோட்டரி கிளப் முடிவு செய்தது. இதையடுத்து சென்னையிலிருந்து சிறப்பு ரயில் மூலம் அவர்களை திருப்பதிக்கு அழைத்துச் சென்று தரிசனம் செய் வழி ஏற்படுத்திக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.




இதற்காக 1008 சிறப்புக் குழந்தைகள் இந்த ஆன்மீக பயணத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  இந்த பயணத்திற்கு சென்னை நோபள் ஹார்ட் ரோட்டரி கிளப் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்த சிறப்பு ஆன்மீக பயணத்தை மாநில இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நாளை காலை 7.10 மணிக்கு  சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் தொடங்கி வைக்கிறார். 


சென்டிரல் ரயில் நிலையத்தின் 11வது பிளாட்பார்மில் நடைபெறும் இந்த விழாவில் ரோட்டரி இயக்குநர் அனிருத்தா ராய் செளத்ரி, தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாதன் ஈர்யா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.