தெலுங்கானா மாநில புதிய முதல்வராகிறார் ரேவந்த் ரெட்டி
ஹைதராபாத்: தெலங்கானா மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் அந்த மாநிலத்தின் அடுத்த முதல்வராக காங்கிரஸ் மாநிலத் தலைவர் ரேவந்த் ரெட்டி பதவியேற்பார். இது குறித்த ஒருமித்த முடிவு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநில சட்டசபைக்கு சமீபத்தில் பொது தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் கட்சியான பிஆர்எஸ் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இந்த போட்டியில் ஆளும் கட்சியை தோற்கடித்து காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. தெலங்கானா மாநிலம் அமைந்த பின்னர் நடைபெற்ற மூன்றாவது சட்டசபை தேர்தல் இது. இதற்கு முந்தைய இரு தேர்தல்களிலும் பி ஆர் எஸ் கட்சியை வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இரண்டு முறையும் கே சந்திரசேகர ராவ் முதல்வராக பொறுப்பேற்றார்.
ஆனால் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் அப்படியே முடிவு தலைகீழாக மாறி காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. தெலங்கானா மாநிலம் அமைந்த பின்னர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைய உள்ளது இதுவே முதல் முறையாகும். சமீபத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவராக பதவியேற்ற ரேவந்த் அனுமலா ரெட்டி மிகச்சிறப்பான முறையில் செயல்பட்டு அக்கட்சியை அங்கு வெற்றி பெற வைத்துள்ளார். அவர் இந்த தேர்தலில் தோல்வியுற்றாலும் கூட முதல்வராக அவர் பதவியேற்க உள்ளார். டிசம்பர் 7ஆம் தேதி அவர் முதல்வராக பதவியேற்பார் என்று தெரிகிறது. அவருடன் சில அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர்.
இது குறித்த முடிவை காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒருமித்த எடுக்கப்பட்டதுமுதல்வராக ரேவந்த் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் மேல் இடம் விரைவில் அறிவிக்க வேண்டும் என்று தெரிகிறது.
மறைந்த காங்கிரஸ் தலைவர் ஜெயபால் ரெட்டியின் உறவினர்தான் ரேவந்த் ரெட்டி. இதற்கு முன்பு தெலுங்கு தேசம் கட்சியில் அவர் செயல்பட்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கடந்த ஆறு ஆண்டுகளாக அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.