பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கடலூரில் இயக்குனர் தங்கர் பச்சான் போட்டி!

Meenakshi
Mar 22, 2024,11:44 AM IST

சென்னை: பாஜக கூட்டணியில் உள்ள பாமக போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் கடலூர் தொகுதியில் இயக்குனர் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார்.


நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு  10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.



பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் பட்டியல்


1. கடலூர் தொகுதி வேட்பாளர் - இயக்குனர்  தங்கர்பச்சான்

2. அரக்கோணம் - வழக்கறிஞர் கே. பாலு

3. ஆரணி  - முனைவர் அ.கணேஷ் குமார்

4. மயிலாடுதுறை - ம.க ஸ்டாலின்

5. கள்ளக்குறிச்சி- இரா. தேவதாஸ் போட்டி

6. தர்மபுரி - அரசாங்கம், 

7. சேலம் - நா அண்ணாதுரை,

8. விழுப்புரம் - முரளி சங்கர்

9. திண்டுக்கல் வேட்பாளர் - திலகபாமா


10 தொகுதிகளில் போட்டியிடும் பாமக 9 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. லோக்சபா தேர்தலில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தர்மபுரி தொகுதியில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் போட்டியிடவில்லை. காஞ்சிபுரம் தனி தொகுதிக்கான வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.