புத்தகம் படிங்க பாஸ்.. பிரெய்ன் ஃபிரெஷ் ஆகும்.. சிந்தனை சிறப்பாகும்!
Apr 24, 2023,11:31 AM IST
- மகா
வழக்கம்போல சாயங்காலம் ஜில்லென்று காற்று வீசிக் கொண்டிருந்தது. கோடை காலத்தில் சில்லென்ற காற்றா என்று நினைக்கிறீர்களா... அட ஆமாங்க.. சம்மரிலும் சில நேரங்களில் குளுகுளு காத்தும், ஜில்லென்ற கோடை மழையும் வருமே.. அந்த மாதிரி இப்போது காற்று வீசிக் கொண்டிருந்தது. அது மாலை ஆறு முப்பது மணி.. மாலா, செல்வி , கவிதா , ராணி என அக்கம்பக்கத்து அரட்டைக் கச்சேரி மெம்பர்ஸ் எல்லோரும் தவறாமல் ஆஜராயிட்டாங்க.. பிறகென்ன கலகலன்னு பேச்சுக்கச்சேரி தொடங்கியது.
இன்னிக்கு உங்க வீட்ல என்ன சமையல் என்று ஆரம்பித்து ஒவ்வொரு ஏரியாவாக டாக் ஓடியது. "ராணி மாமியார்.. ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டாங்களா..தெரியுமா ?" என்று ஒரு பொறணியைப் பத்த வைக்க.. "ஆமாமா அந்த கிழவிக்கு வேற வேலையே இல்ல எப்ப பாத்தாலும் மருமகளை திட்டிக்கிட்டே இருக்கிறது , டார்ச்சர் பண்றதுன்னு ஒரே தொல்லை. ஒரு நாள் இல்லனா ஒரு நாள் போலீஸ் ஸ்டேஷன்ல போய் ஒரு கம்பிளைன்ட் கொடுத்துட்டு வரணும் அந்த கிழவியை பத்தி" என்று மற்றவர்கள் சொல்ல ராணிக்கு அப்படியே 10 டன் அருண் ஐஸ்க்ரீமை தலையில் ஊற்றியது போல ஜில்லென்றாகி விட்டது.
இப்படியா கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது அந்த "காசிப்" கச்சேரி. இந்த டீமில் உள்ள கவிதாவோட பொண்ணு 5ம் வகுப்பு படிச்சிட்டிருக்கு. ஆனால் பாருங்க டியூஷன் போகாமல் வீட்டிலேயே படிக்கிறா. மாலதியோட பையன் ஏழாம் வகுப்பு மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல படிக்கிறான். ஆனா அவனுக்கு தமிழ் கரெக்டா எழுத வராது. நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணுவான். சரியாக படிக்க கூட அவனுக்கு தெரியாது அதே மாதிரி அவன் மார்க்கும் பெருசா எடுக்க மாட்டான். கொஞ்சம் ஸ்லோவா தான் படிப்பான்.
இதுகுறித்து கவிதாவிடமே மாலதி கேட்டார். "ஏன் கவி, உன் பொண்ணு மட்டும் எப்படி நல்லா படிக்கிறா, டியூஷன் கூட போறது இல்ல, தமிழ்ல ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் கூட இல்லாமல் நல்லா எழுதுறா , படிக்கிறா, அதே மாதிரி கிளாஸ் பஸ்ட் வரா, நாங்க எல்லாரும் பசங்கள டியூஷனுக்கு அனுப்புறோம், மாசா மாசம் அவ்ளோ ஃபீஸ் கட்டுறோம் . ஆனா உன் பொண்ணு மட்டும் வீட்டிலேயே இருந்துட்டு இவ்ளோ நல்லா படிக்கிறாளே அது எப்படி. அந்த ரகசியம்தான் என்னனு எங்க கிட்டயும் சொன்னா என்ன குறைஞ்சா போயிருவ" என்று சீண்டினார்.
இதைக் கேட்டு சிரித்தபடி கவிதா, "என் பொண்ணு தமிழ்ல மிகவும் சரியா எழுத ஆரம்பிச்சதுக்கு காரணம் அவளோட புத்தகம் படிக்கிற பழக்கம் தான். தினமும் புத்தகம் படிப்பா. இந்த பழக்கத்தை நான் ரொம்ப சின்ன வயசுல இருந்தே அவளுக்கு கத்துக் கொடுத்துட்டேன். சின்ன குழந்தையா இருக்கும்போது அதாவது ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கும் போது, அவ வந்து ஸ்கூல் புக்ஸ் படிப்பா. இப்ப ஃபிப்த் ஸ்டாண்டர்ட் வந்த உடனே நான் திருக்குறள் புத்தகம், பாரதிதாசன் கவிதை���ள்,பாரதிதாசன் கவிதைகள், நம்ம டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் புத்தகம் என வாங்கிக் கொடுத்துப் படிக்கப் பழக்கிட்டேன்.
தினமும் ஒரு பக்கம்னு படிக்க ஆரம்பிச்சு அதுக்கப்புறம் ஒரு புத்தகத்தில் அஞ்சு பக்கமாவது படிப்பா. அந்த மாதிரி புத்தகம் படிக்கறதுனால அவளுக்கு தமிழ் சரமாளாயிருச்சு.. தப்பு இல்லாம எழுத முடியுது. வார்த்தைகள் பழக்கமாகுது, வாசிப்பு அவளோட சிந்தனையையும் தூண்டுது. தெளிவாகவும் திருத்தமாகவும் வாசிப்பதற்கும் முடிகிறது. நன்றாக எழுதவும் படிக்கவும் நல்ல அறிவை வளர்க்கவும், புத்தகம் படிக்கும் பழக்கம் அவளுக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கு" என்று விடாமல் பேசி விளக்கி நிறுத்தி விட்டு சற்றே ரிலாக்ஸ் ஆனார் கவிதா.
உண்மைதான்.. மாணவர்கள் புத்தகங்களை படிப்பது அவர்கள் நல்வழியில் செல்வதற்கு உதவுகிறது. மாணவர்களின் சிறந்த நண்பர்களாக, புத்தகங்கள் இருக்கின்றன. வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது புத்தகங்கள். மாணவர்களுக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் தருகிறது. நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள உதவுகிறது. தனித்துவ அறிவை உலகிற்கு அழைத்து சென்று வாழ்க்கை தரத்தை மேம்படுத்துகிறது. புத்தகத்தை படிக்கும் போது ,தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் மாணவர்கள் விளங்குகின்றனர்.
கடின உழைப்பை மேற்கொள்ளவும் புத்தகங்கள் வழிகாட்டுகின்றன. புத்தகங்களை படிப்பதன் மூலம் மாணவர்கள் தங்கள் மன அழுத்தத்தை போக்கும் போது அது இயற்கையாகவே அவர்களின் வாழ்க்கையில் கவனம் செலுத்த உதவுகிறது. அது அவர்களின் கல்வி செயல் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும் அவர்கள் மிகக் குறைந்த நேரத்தில் கற்றுக் கொள்ள முடிகிறது. மாணவர்கள் சிந்திக்கும் திறனை மேம்படுத்தவும், புத்தகங்கள் மாணவர்களை தன்னம்பிக்கை மற்றும் கருணை உள்ளவர்களாக ஆக்குகிறது.
மாணவர்கள் தங்கள் சொற்களஞ்சியத்தை மேம்படுத்த விரும்பினால் புத்தகங்களை படிப்பது அவர்களுக்கு விரைவான தீர்வை தருகிறது. தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் கடின உழைப்பை மேற்கொள்ளவும் மாணவர்களின் அனுபவத்தை பலப்படுத்தி அவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துகிறது. புத்தகம் படிப்பதன் மூலமாக மாணவர்கள் அதிக அறிவை பெறுகின்றனர். நினைவுத்திறனை மேம்படுத்துகின்றனர். புத்தகம் படிக்கும் பழக்கத்தை மாணவர்களிடையே நாம் ஊக்கப்படுத்த வேண்டும்.