RBI Explains.. ரூபாய் நோட்டில் இந்த குறியீடு இருந்தால் கள்ள நோட்டா?
Jul 28, 2023,09:39 AM IST
டெல்லி : ரூபாய் நோட்டுக்களின் சீரியல் நம்பர்களில் ( * ) குறியீடு இருந்தால் அது கள்ளநோட்டு என்ற தகவல் கடந்த சில நாட்களாக பரவி, பரபரப்பை கிளப்பி உள்ளது. இதனால் இது தொடர்பாக மத்திய ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
( * ) குறியீட்டுடன் இருக்கும் ரூபாய் நோட்டுக்கள் கள்ள நோட்டுக்கள். இந்த நோட்டுக்களின் புழக்கம் அதிகரித்து வருவதாக கடந்த சில நாட்களாக ஒரு தகவல் சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. இது குறித்து பலரும் சந்தேகம் எழுப்ப துவங்கி விட்டனர். இதனையடுத்து ஆர்பிஐ விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்த குறியீடு வெறும் நம்பர் பேனல் அடிப்படையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றபடி இது கள்ளநோட்டு கிடையாது.
பழுதடைந்த ரூபாய் நோட்டுக்கள் மாற்றப்பட்டு, புதிய நோட்டுக்கள் புழக்கத்தில் மக்கள் பயன்படுத்த வெளியிடப்பட்டு வருகிறது. புதிதாக அச்சடிக்கப்பட்ட100 தாள்கள் கொண்ட ரூபாய் கட்டில் ( * ) குறியீடு இருந்தால் அவை புதிதாக மாற்றப்பட்ட நோட்டு என்று அர்த்தம். அதனால் ( * ) குறியீட்டுடன் இருக்கும் நோட்டுக்கள் கள்ள நோட்டுக்கள் என்று தகவலை யாரும் நம்ப வேண்டாம். இது செல்லத்தக்கது தான்.
மற்ற ரூபாய் நோட்டுக்களில் எப்படி சீரியல் நம்பர்கள் பயன்படுத்தப்படுகிறதோ அதே போல் தான் புதிய நோட்டுக்களில் எண்களுக்கு பதிலாக ஸ்டார் சிம்பல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த குறியீடு இருந்தால் அது புதிதாக மாற்றப்பட்ட நோட்டு என அடையாளம் கண்டு கொள்ளலாம்.