பிறை தெரியவில்லை.. தமிழ்நாட்டில் வியாழக்கிழமை ரம்ஜான் கொண்டாடப்படும்.. தலைமை காஜியார் அறிவிப்பு

Su.tha Arivalagan
Apr 09, 2024,08:54 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று பிறை தென்படாத காரணத்தால், ரம்ஜான் பண்டிகை, வியாழக்கிழமை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜியார் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் மார்ச் 12ம் தேதி ரமலான் நோன்பு தொடங்கியது. இந்த நிலையில் நாளை ரம்ஜான் பண்டிகை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று பிறை தென்படவில்லை. இதையடுத்து ரம்ஜான் பண்டிகை ஏப்ரல் 11ம் தேதி வியாழக்கிழமையன்று கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமைக் காஜியார் சலாஹுதீன் முகம்மது அயூப் அறிவித்துள்ளார்.




பிறை எப்போது தென்படும் என்ற எதிர்பார்ப்பிலும், ஆ்வலிலும் இன்று பலரும் காத்திருந்தனர். இருப்பினும் இன்று பிறை தென்படவில்லை என்பதால் பண்டிகை ஒரு நாள் தள்ளிப் போயுள்ளது. 


இதற்கிடையே சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாகிஸ்தானில் இன்று பிறை தென்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கெல்லாம் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. வழக்கமாக சவூதியில் ரம்ஜான் கொண்டாடப்படும் சமயத்தில்தான் கேரளாவிலும் தமிழ்நாட்டின் கோவையிலும் ரம்ஜான் கொண்டாடப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவைப் போலவே, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இன்று பிறை தென்படவில்லை. இதனால் அங்கும் 11ம் தேதிதான் ரம்ஜான் கொண்டாடப்படுகிறது.