ரம்ஜான் நோன்பு.. மார்ச் 2 முதல் தொடக்கம்.. தமிழ்நாடு அரசின் தலைமை காஜியார் அறிவிப்பு

Su.tha Arivalagan
Feb 28, 2025,09:00 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று ரமலான் மாதத் தொடக்கத்தைக் குறைக்கும் பிறை தென்படாத காரணத்தால், மார்ச் 2ம் தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக தமிழ்நாடு அரசின் தலைமை காஜியார் அறிவித்துள்ளார்.


இதுதொடர்பாக தலைமை காஜியார், டாக்டர் சலாஹுதீன் முகம்மது அயூப் அல் அஸாரி, அல் குவாதிரி அல் கஸ்நாசினி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரமதான் மாத புதிய பிறை இன்று தெரியவில்லை. இதனால் மார்ச் 2ம் தேதி புதிய ரமதான் மாதத்தின் முதல் நாளாக கருத்தில் கொண்டு அன்று முதல் ரமலான் நோன்புக் காலம் தொடங்குவதாக அறிவிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.




இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரம்ஜான் மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் நோன்பு இருந்து சிறப்பு தொழுகைகளில் ஈடுபட்டு ரம்ஜான் மாதத்தின் இறுதி நாளில் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடுவது வழக்கமாகும்.


அரபு நாடுகளில் மார்ச் 1ம் தேதி முதல் நோன்புக் காலம் தொடங்குகிறது. தமிழ்நாட்டிலும் இந்தியாவின் இதரப் பகுதிகளிலும் மார்ச் 2ம் தேதி முதல் நோன்பு தொடங்கவுள்ளது.