"ஒன்றரை மணி நேரம் டென்ஷன் பண்ணிட்டாங்க.. but.. 100% கப் நம்தே".. தலைவரே சொலிட்டாருப்பா!

Su.tha Arivalagan
Nov 16, 2023,08:47 PM IST

சென்னை: இந்தியா நிச்சயம் உலகக் கோப்பையை வெல்லும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


இந்தியா - நியூசிலாந்து இடையிலான உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டி நேற்று மும்பையில் நடந்தது. இப்போட்டியில் இந்தியா சிறப்பாக ஆடி 397 ரன்களைக் குவித்து அசத்தியது. விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐய்யர் ஆகியோர் சதம் அடித்தனர். சுப்மன் கில் 80 ரன்களைக் குவித்தார்.


பின்னர் பந்து வீச்சில் லேசாக சொதப்பினாலும் கூட, முகம்மது ஷமியின் அபாரமான பந்து வீச்சால், சிறப்பாக செயல்பட்டு பிரமாதமான வெற்றியைப் பெற்று இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்து விட்டது.




நேற்றைய போட்டியை இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பிரபலங்கள் திரண்டு வந்து பார்த்து மகிழ்ந்தனர். அதில் நம்ம ஊர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் ஒருவர். தனது மனைவி லதா ரஜினிகாந்த், மைத்துனர் ரவி ராகவேந்தர் ஆகியோர் புடை சூழ போட்டியை கண்டு களித்தார் ரஜினிகாந்த்.


தனது மும்பை பயணத்தை முடித்துக் கொண்டு இன்று ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவரிடம் செய்தியாளர்கள் இந்தியாவின் வெற்றி குறித்து கேட்டபோது, முதல்ல கொஞ்சம் டென்ஷனா இருந்துச்சு. ஆனால் 2, 3 விக்கெட் விழுந்த பிறகு, பதட்டம் போயிருச்சு. ஒன்றரை மணி நேரம் டென்ஷன்தான். ஆனால் 100% கப் நம்தே.. நமக்குத்தான்.. நேற்றைய போட்டியின் வெற்றிக்கு முகம்மது ஷமிதான் காரணம் என்றார் ரஜினிகாந்த்.