சென்னை உள்பட 6 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழை .. தமிழ்நாட்டுக்கு மஞ்சள் அலர்ட்

Manjula Devi
Nov 12, 2024,10:25 AM IST

சென்னை: தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில்  உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை உள்பட 6 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை முழுவதும் நேற்று இரவு முதல் தற்போது வரை அடைமழை பெய்து வருகிறது. இந்தத் தொடர் மழை காரணமாக சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள்  கனமழைக்கு வாய்ப்பு வாய்ப்பு உள்ளதால் இன்று முதல் வரும் நவம்பர் 18ஆம் தேதி வரை தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். 

அதேபோல் ஆந்திராவில் இன்று முதல் மூன்று நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கர்நாடகாவில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு ஒரு சில இடங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கேரளாவில் நாளை முதல் 6 நாட்கள் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

இதற்கிடையே தமிழ்நாட்டில் வரும் 17ஆம் தேதி வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

பிற்பகல் 1 மணி வரை

சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு பிற்பகல் 1 மணி வரை மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழை நீடிக்கும்.

இன்று கனமழை:

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

நாளை கன மழை:

 சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர்,சிவகங்கை, தூத்துக்குடி, ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

நாளை மறுநாள்:

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி,ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

நவம்பர் 15ஆம் தேதி:

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

நவம்பர் 16 மற்றும் 17ஆம் தேதி: 

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர்,நாமக்கல், சேலம், ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்