வெயிலுக்கு குட்டி பிரேக்.. தமிழ்நாட்டில் ஜூன் 1ஆம் தேதி.. கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்

Manjula Devi
May 28, 2024,05:38 PM IST

சென்னை:  தமிழ்நாட்டில்  ஜூன் ஒன்றாம் தேதி ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் தற்போது  வெயில் அதிகரித்து வரும் நிலையில், வட கடலோரப் பகுதிகளில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் கொளுத்தியது.மேலும் வரும் நாட்களில் வெப்ப நிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.




இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜூன் ஒன்றாம் தேதி ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதனிடைய இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை 87 சதவீதம் என்ற சராசரி அளவை விட 106% கூடுதலாக மழைப்பொழிவு இருக்குமாம்.


கேரளாவில்  தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்க நிலையில், கேரளாவில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாம். அதேபோல் கர்நாடகாவிலும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது.