மறுபடியும் முதல்ல இருந்தா.. தமிழகத்தில்.. நாளை முதல் 26 ஆம் தேதி வரை.. மழை பெய்யுமாம்!

Su.tha Arivalagan
Dec 20, 2023,04:02 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 26 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


ஏற்கனவே குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய கீழடுக்கு சுழற்சியால் தென் மாவட்டங்களில் அதீத கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி,குமரி, ஆகிய மாவட்டங்கள் முழுவதும் நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இன்னும் நகரின் சில பகுதிகளில் வெள்ளம் வடியாமல் இருப்பதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் தற்போது லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு பெய்யக்கூடும். இருப்பினும் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும் என தெரிவித்துள்ளது.




சென்னையை பொருத்தவரை ,அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.


21. 12. 2023 அன்று


தமிழகத்தில் ஒரு சில  இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது  வரை மழையை எதிர்பார்க்கலாம்.


தென் தமிழக கடலோரப் பகுதிகள் ,மன்னர் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் .இதனால் குறிப்பிட்ட தேதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது


22. 12. 2023 முதல்  26.12.2023 வரை


தமிழகம் , புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.