கரையை கடந்த "மிதிலி".. இனி வரும் இனிய மழை..  இன்றும் நாளையும் நன்றாக நனைக்கும்!

Su.tha Arivalagan
Nov 18, 2023,02:25 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: வங்கதேசத்தில் நேற்று மிதிலி புயல் கரையை கடந்து விட்டதால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த அழுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, புயலாக மாறி, நேற்று வங்கதேசம் அருகே புயல் கரையைக் கடந்தது.இதனால் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.


இன்று  கன மழை பெய்யும் மாவட்டங்கள்:




ராமநாதபுரம் ,தேனி ,தென்காசி ,நெல்லை ,தூத்துக்குடி ,கன்னியாகுமரி, மயிலாடுதுறை ,தஞ்சை, திருவாரூர் ,நாகை ,புதுக்கோட்டை, உள்ளிட்ட 11 மாவட்டங்களில்  இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளை கன மழை பெய்யும் மாவட்டங்கள்:


புதுக்கோட்டை, சிவகங்கை ராமநாதபுரம் ,தூத்துக்குடி ,திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஆகிய ஆறு மாவட்டங்களில் நாளை ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.


சென்னையைப் பொறுத்தவரை சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான  மழை எதிர்பார்க்கலாம்.