வெளியே போனா கொடையோட போங்க..  2 நாளைக்கு மழை இருக்கு!

Meenakshi
Sep 28, 2023,01:59 PM IST

சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் கனமழை மற்றும் மிதமான மழைக்கு  வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வடக்கு அந்தமான் கடல், மியான்மர் கடற்கரை பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல சுழற்சி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம்  அறிவித்துள்ளது. இதன் காரணமாக இன்றும் நாளையும் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.


வடமேற்கு திசையில் நகர்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைய கூடும் என்பதனால், தமிழ்நாட்டில் வளிமண்டல சுழற்சி காரணமாக நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புகள் அதிகம்.


திருநெல்வேலி, மணியாச்சி, வேதநத்தம், கொடுமுடியாறு ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. 

சென்னை, திண்டுக்கல், நாகை,சேலம், திருப்பத்தூர், திருவள்ளூர், நீலகிரி, வேலூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இன்று வெப்ப நிலை எப்போது இல்லாதது போல குறைந்து காணப்பட்டது.