மழை எச்சரிக்கை.. 18 மாவட்டங்களில்.. இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

Manjula Devi
Oct 03, 2024,10:24 AM IST

சென்னை:   தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல  மேலடுக்கு சுழற்சி நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.குறிப்பாக மதுரையில் வெப்பநிலை அதிகரித்து வந்த நிலையில் தொடர்ந்து மூன்று நாட்களாக நல்ல மழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதியில் தற்போது வெயிலின் தாக்கம் குறைந்து குளுமையான சூழல் நிலவி வருகிறது. அதேபோல் திருவண்ணாமலை, வந்தவாசி, செங்கம், உள்ளிட்ட பல பகுதிகளில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் மாலை இரவு நேரங்களில்  கருமேகம் சூழ்ந்து கன மழை கொட்டி தீர்த்தது.




இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 


திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர் பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஆகிய 18 மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை:


சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் 36 படகுகள் தயார் நிலையில்   வைக்கப்பட்டுள்ளன. இதில்  மண்டலம் மூன்றுக்கு 1 படகும் மண்டலம், மண்டலம் 14க்கு இரண்டு படகுகளும் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள படகுகள் மற்ற மண்டலங்களுக்கும் வழங்கப்பட உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்