ரகசியமாக துபாய் பறந்த ராகுல் காந்தி...படம் பிடித்த வைரலாக்கிய பெண் பயணி

Aadmika
Dec 31, 2023,05:32 PM IST

டில்லி : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவசரமாக துபாய் சென்றுள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. சக பயணி ஒருவர் வெளியிட்ட வீடியோ தற்போது செம டிரெண்டாகி வருகிறது.


அரசியல் பாத யாத்திரை, 2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராவது என பரபரப்பாக அரசியல் வேலைகளில் ஈடுபட்டு வரும் ராகுல் காந்தி, தற்போது ரகசியமாக துபாய் சென்றுள்ளார். டில்லியில் இருந்து துபாய் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் டிசம்பர் 29ம் தேதி சென்றுள்ளார். இரவு 07.45 மணிக்கு புறப்பட வேண்டி இந்த விமானம், பனிமூட்டம் காரணமாக தாமதமாக நள்ளிரவு 12 மணிக்கு தான் புறப்பட்டு சென்றுள்ளது. விமான பயணிகள் 4 மணி நேரம் விமானத்திற்குள் காத்திருந்துள்ளனர். அவர்களுடன் ராகுல் காந்தியும் இருந்துள்ளார். 


சக பயணி ஒருவர் ராகுல் காந்தி தங்களுடன் இருக்கும் வீடியோ ஒன்றை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், பெண் ஒருவர் பின்னால் இருந்து, ஆல் தி பெஸ்ட் ராகுல் என சத்தமிடுகிறார். தனது சீட்டில் இருந்து எழுந்து நடக்க முயன்ற ராகுல், திரும்பி பார்த்து அந்த பெண்ணை நோக்கி கை அசைத்து சென்றுள்ள காட்சி இடம்பெற்றுள்ளது. தாங்கள் 4 மணி நேரமாக விமானத்திற்குள் இருப்பதாகவும் இங்கு பயணி, விமான பணிப்பெண்கள் யாரும் வரவில்லை என்பதை சுட்டிக்காட்டுவதற்காகவே அந்த பெண் இந்த வீடியோவை எடுத்துள்ளார். ஆனால் அங்கு ராகுல் காந்தியும் வந்து விட்டார்.




விமானம் புறப்படும் நேரம் வந்ததால் கழிவறைக்கு செல்வதற்காக அந்த பெண் சென்ற போது முன்னால் இருந்த சீட்டில் அமர்ந்து ராகுல் காந்தி, ஏதோ படித்துக் கொண்டிருப்பதை கண்டார். முதலில் அது ராகுல் காந்தி என்பதை நம்ப முடியாத அந்த பெண்,  விமானம் புறப்பட்டதும் எழுந்து வந்து மீண்டும் பார்த்துள்ளார். ஆனால் அப்போது ராகுல் காந்தி தூங்கிக் கொண்டிருந்துள்ளார். விமானத்தில் இருந்த அனைவரும் ராகுல் காந்தியை பார்த்துள்ளனர். ஆனால் அவரை யாரும் தொந்தரவு செய்யாமல் இருந்துள்ளனர்.


ராகுல் காந்தி எழுந்த பிறகு பலரும் தங்களின் மொபைல் போனில் ராகுல் காந்தியை படம் எடுக்க துவங்கி விட்டனர். விமான பணியாளர்கள் பயணிகளை இருக்கையில் அமரும் படி சொல்லி உள்ளனர். எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் மற்ற பயணிகளுடன் மிக சாதாரணமாக ராகுல் காந்தி துபாய் சென்றது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. 


தனிப்பட்ட காரணங்களுக்காக ராகுல் காந்தி துபாய் சென்றுள்ளதாகவும், ஜனவரி 03ம் தேதியே அவர் இந்தியா திரும்பி வரலாம் என்றும் சொல்லப்படுகிறது.