பிளஸ்டூ தேர்வுகள் நாளை தொடக்கம்.. மாணவர்களே ரிலாக்ஸா போய்.. ஜம்முன்னு எழுதிட்டு வாங்க!
Feb 29, 2024,07:22 PM IST
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது தேர்வு நாளை தொடங்கவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2024-2025ம் ஆண்டுகளுக்கான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை முதல் வருகிற 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 9.25 லட்சம் மாணவ மாணவிகள் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர். தேர்வு எழுத 3,300க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் காப்பி அடித்தல், விடைத்தாள்களை மாற்றுதல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபவர்கள் பிடிக்க 3200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிவறை வசதிகள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கு பல்வேறு கடும் கட்டுப்பாடுகளும் மிதிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறைக்குள் செல்போன் உட்பட மின் சாதனம் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை தமிழ் பாடத் தேர்வுடன் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்குகிறது.