உளவியல் சிகிச்சைக்கு மருந்து மாத்திரைகளுடன்.. உரிய மருத்துவர்களை அணுக வேண்டும்.. வைரமுத்து

Meenakshi
Sep 20, 2024,12:38 PM IST

சென்னை:   உளவியல் சிகிச்சைக்கு மருந்து மாத்திரைகளும் உண்டு, உரிய மருத்துவர்களை அணுக வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.


உளவியல் அல்லது மனோதத்துவம் என்பது மனதின் செயல்பாடு ஆய்வு செய்யும் முறையாகும்.உளவியல் அடிப்படை ஆய்வு என்பது உள்ளுணர்வு, அறியும் ஆற்றல், கவனம், மன உணர்வு அல்லது உணர்ச்சி  வேகம், இயல்பு ஊக்கம், மூளை செயல்நாடுகள், ஆளுமை, நடத்தை மற்றும் உள்ளார்ந்த தொடர்புகள் ஆகியவற்றை கொண்டதாகும்.


இது குறித்து வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:


 


வாழ்வியல் தோல்விகளாலும்

பலவீனமான இதயத்தாலும்

நிறைவேறாத ஆசைகளாலும்

மன அழுத்தத்திற்கு உள்ளாகி

அதன் உச்சமாய் 

மூளைப் பிறழ்வுக்கு ஆளாகும் சிலர்

ஒருதலையாய் நேசிக்கப்பட்டவர்கள்மீது

வக்கிர வார்த்தைகளை

உக்கிரமாய் வீசுவர்;

தொடர்பற்ற மொழிகள் பேசுவர்


பைத்தியம்போல் சிலநேரமும்

பைத்தியம் 

தெளிந்தவர்போல் சிலநேரமும்

காட்சியளிப்பர்


தம்மைக் கடவுள் என்று

கருதிக்கொள்வர்


இந்த நோய்க்கு 

‘Messianic Delusional Disorder’

என்று பெயர்


அவர்கள் தண்டிக்கப்பட

வேண்டியவர்கள் அல்லர்;

இரக்கத்திற்குரியவர்கள்;

அனுதாபத்தால்

குணப்படுத்தக் கூடியவர்கள்


உளவியல் சிகிச்சையும்

மருந்து மாத்திரைகளும் உண்டு

உரிய மருத்துவர்களை

அணுக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்