Proverbs.. பழமொழியும் மருத்துவமும்...சித்தம் தெளிய வில்வம்.. அப்படின்னா என்னா அர்த்தம்?

Swarnalakshmi
Dec 21, 2024,02:46 PM IST

சித்தம் தெளிய வில்வம்... அப்படின்னு சொல்வாங்க கேட்டிருக்கீங்களா.. அதுக்குள்ள மிகப் பெரிய மருத்துவ அர்த்தம் பொதிந்திருக்குங்க.. அதைப் பத்திதான் பார்க்கப் போறோம்.


வில்வத்தை சிவ  மூலிகைகளின் சிகரம் என்று அழைப்பார்கள். மனக்கோளாறு காரணமாக பிரச்சனைகளில் மூழ்கி உடலையும், மனதையும் சீரழித்து கொண்டு பித்தம் முற்றியவர்கள் தினசரி வில்வ இலைகளை இரண்டே இரண்டு சாப்பிட்டு வர பல நன்மைகளை பெறலாம்.


மனஅழுத்தம் : அனைவருக்கும் இன்று மனஅழுத்தம் ஏதோ ஒருவகையில் இருக்கிறது. அதாவது, உள்மன சுமை தாங்க முடியாமல் மனஅழுத்தம் ஏற்படுகிறது. இந்த நிலை மாறி சமநிலை ஏற்பட வில்வ இலைகள் உதவுகின்றன. சித்தம் கலங்காது இருக்க உதவும் வில்வம். பித்தம் தணியப் பெரிதும் துணைபுரிகின்றது.




கேரளாவில் உள்ள வேதியியல் விஞ்ஞானி வில்வ இலைகளை ஆராய்ச்சி செய்ததில் டயபெடிக்ஸ் எனப்படும் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு ஒரு ஸ்வீட் ஆன செய்தி அளித்துள்ளார். அதாவது, தினசரி 10 வில்வ இலைகளை மென்று சாப்பிட்டு வர படிப்படியாக நீரிழிவு நோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று கூறுகின்றனர்.


சிவஸ்துதி எனும் மந்திரத்தில் "ஏகவில்வம் சிவார்பணம்" என்ற பதம் வரும். சிவ மூலிகைகளுள் சிகரமாக இருக்கும் வில்வத்தை ஒரு வில்வ இலைக் கொண்டு சிவனுக்கு அர்ச்சனை செய்தால் கூட அதனை ஏற்றுக் கொண்டு சிவன் அருள் செய்வார் என்று அர்த்தம்.

மூன்று இதழ்கள் கொண்டு தோற்றமளிக்கும் வில்வம் சிவபெருமானின் முக்கண்ணை குறிப்பதாகும் என சிவனடியார்கள் போற்றுவர்.5,7,10 இதழ்களைக் கொண்ட வில்வ மரத்தின் இலை வகைகளும் உள்ளது.


சிவ வழிபாட்டின் முதற் பொருளான வில்வ மரத்தை தொட்டாலும், பார்த்தாலும் அதீத சக்தி (cosmic power)உள்ளத்திற்கும், உடலுக்கும் ஆழ்மனதிற்கும் கிடைக்கிறது என்பது மகரிஷிகளின் அனுபவ பூர்வ வாக்காக உள்ளது.


இப்படிப்பட்ட தெய்வீக ஆற்றல் மிக்க வில்வம் சித்தம் கலங்காது இருக்க உதவும். பித்தர் தணியப் பெரிதும் துணைபுரியும். பித்தம் அதிகமாகி மூளையை பிடிக்கும் போது சித்த பிரமை உண்டாகும். வயிற்றைப் பற்றும்  குடற்புண்,  மூல நோய், கண் பார்வை மங்குதல் ஆகியவற்றை போக்க வில்வ இலைகள் பெரிதும் பயன்படுகின்றன. தெய்வீக விருட்சமாக வில்வ மரம் போற்றப்படுவதால் இதனை ஆலயங்களில் வளர்க்கிறார்கள் என்பது ஐதீகம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்