திருமலா பால் விலை ஏறிருச்சு.. புது ரேட் என்ன தெரியுமா.. முதல்ல இதைப் படிங்க!
Apr 04, 2023,12:52 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் தனியார் பால் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்துள்ளன.
சீனிவாசா, திருமலா, ஜெர்சி ஆகிய நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு ரூ. 3 முதல் 4 வரை உயர்த்தியுள்ளன.
அரை லிட்டர் சீனிவாசா பாலின் புதிய விலை ரூ. 37 ஆகும். ஒரு லிட்டர் பால் விலை ரூ. 72 ஆக உயர்ந்துள்ளதாக சீனிவாசா பால் தயாரிப்பாளரான ஸ்ரீரஹ்கம் பால் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அரை லிட்டர் திருமலா பால் விலை ரூ. 37 ஆகவும், ஒரு லிட்டர் ரூ. 74 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனமும் தெரிவித்துள்ளது. ஜெர்சி பால் விலை அரை லிட்டருக்கு ரூ.33 ஆகவும், ஒரு லிட்டர் பால் ரூ. 66 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல தயிர், மோர், பக்கட் தயிர், லஸ்ஸி ஆகியவற்றின் விலையும் ரூ. 4 முதல் 40 வரை உயர்த்தப்பட்டுள்ளது.